Monday, April 17, 2023

மணிரத்னத்து கிட்ட சரக்கு தீர்ந்து போயி ரொம்ப நாளாச்சு சார்,,.

 மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு இயக்குநர்.. தமிழ் படங்களையும் உலக அளவில் எடுத்துச் சென்றவர்...


ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம் முக்கியம் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசை தான் இவருக்கு அஸ்திவாரம்.

இவரின் முதல் படமான " பகல் நிலவு "' படத்தை நானும், கோகியும் ராஜேஸ்வரி டீச்சர் ( டியூஷன்) வீட்டு மொட்டைமாடியில் இருந்து பாா்த்தோம்.. அவங்க வீட்டு மொட்டைமாடியில் இருந்து பாா்த்தா எங்க ஊரு பாலமுருகன் தியேட்டர் தெரியும்.. இப்ப மாதிரி ஏ.சி இல்லாததால் இரவுக்காட்சிக்கு கதவைத் திறந்து வைத்து விடுவார்கள்.. அப்படி பல படங்களின் காட்சிகளைப் பார்ப்பது எங்கள் வழக்கம் ( அப்கோர்ஸ் மாடியில் படிப்பதாகச் சொல்லி விட்டுத்தான்)
பகல்நிலவில் ஆரம்பித்து மௌனராகம் , அக்னிநட்சத்திரம், நாயகன், தளபதி, திருடா திருடா, அஞ்சலி,ரோஜா, பம்பாய், உயிரே, அலைபாயுதே, ராவணன், ஓ காதல் கண்மணி வரை பார்த்துள்ளேன்..
பகல்நிலவு , மெளனராகம், அஞ்சலி மூன்றுமே எனது அபிமான நடிகை ரேவதி நடித்திருந்தார்.. இல்லை வாழ்ந்திருப்பாா்..பகல்நிலவில் முரளி, ராதிகா, சரத்,சத்யராஜ், முட்டம் கடற்கரை என்று எல்லாருக்குமே அருமையாய்த்தான் நடித்து இருப்பார்கள்.. ஏன் தாத்தா கஞ்சி குடிக்கற?! என்னம்மா! பண்றது உங்கப்பன் பணக்காரன் நீ பலகாரம் சாப்பிடற! எங்கப்பன் ஏழை அதான் கஞ்சி குடிக்கிறேன் " வசனம் பேமஸ்.. மௌனராகம் திவ்யாவை யாரும் மறந்திருப்பாா்களா? என்ன.. அதே போல கார்த்திக், மோகன் இருவருமே அற்புதமாக பண்ணியிருப்பாா்கள்.. அதிலும் கார்த்திக், awesome.. மோகன் இயல்பாக நடித்த ஒரே படம் இதுதான்.. அதுவும் கார்த்திக் சாகும் போது ரேவதி உறைந்து நிற்கும் சீன், முதலிரவுக்காட்சி, பெளர்ணமி நிலவு தாஜ்மஹால்.. அந்தச் சந்த்ரமௌலி சீன்.. கொலுசு சீன், சிங்குக்கு தப்புத் தப்பாக தமிழ் கற்றுக் கொடுக்கும் ரேவதி மோகன் அடிபட்ட போது நன்றி சொல்ல அவர் போடா டேய் என்று சொல்லும் காட்சி.. அப்பப்பா! இன்று வரை பெண்களின் விருப்பப் படம்..
என்ன பாலச்சந்தர் போலவே தனது கதைகளை இவரே ரீமேக் செய்து கொள்வாா்.. பகல்நிலவு தான் நாயகன்,.. காட்சிகளும் வசனங்களும் ரிபீட்டாக வரும்.. நீங்க தொட்டா கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு என்ற வசனத்தை ரேவதி முரளியிடமும், சொல்வாா், மோகனிடமும் சொல்வாா்.. அக்னிநட்சத்திரம் கேமராவுக்காவே விரும்பிப் பாா்த்த படம்.. அப்போது மெல்லிய இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன.. அதிலும் பாடல் காட்சிகள் சான்ஸே இல்லை.. ஒரு எலி,இரண்டு எலி கேள்விப்பட்டதில்ல! அது போல அஞ்சலி என் பேரு என்பாா் அமலா.. அவரின் சொந்தக்குரல் அவ்வளவு அழகாய் இருக்கும்.. பிரபு, கார்த்திக்,நிரோஷா சுமித்ரா, ஜெயச்சித்ரா, விஜயகுமார், பாட்டி, வில்லன் எல்லாமே.. அற்புதம் தான்.. " எம் பெண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா " இந்தப் படத்தில் தான்..
நாயகன் இதில் பிடிக்காத காட்சி என்று ஒன்று கூட இல்லை.. சரண்யா நாளைக்கு கணக்குப் பரீட்சை என்று சொல்வாரே! குயிலி நடனம், சரண்யா சாகும் சீன், கமல் வேலு நாயக்கராக மாறுவது, அந்தப் பாட்டி கமலைக் காட்டிக் கொடுக்க மறுப்பது, உப்பு மூட்டை கடலில் போடுவது.. பாபா மர்கயா, மை பாபா மர்கயா என்று சொல்வது, நீங்க நல்லவரா? கெட்டவரா? , ஆவேச கார்த்திகா, அமைதியான ரவி, .. நீ ஒரு பாதி பாட்டின் இண்டியா கேட் புறாக்கள்.. இது அத்தனையும் விட கமல்.. கமல்..
தளபதி ரஜினி யின் மிகப் பிடித்த படங்களில் ஒன்று.. தலைவர் வரும் காட்சிகளில் எல்லாம் பின்னால் வரும் சூர்ய வட்டம், யமுனை ஆற்றிலே, பாட்டு, ஷோபனா, சின்னத் தாயவள் ஒற்றை மல்லிகை மொட்டு, அந்த டிரெயின், அழகு அரவிந்த், மம்முட்டி, ஏந்திரி தேவா ஏந்திரி.. வசனம்.. சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ரஜினியிடம் ஷோபனா மறுப்பு சொல்லும் போது போ என்று விட்டு முகத்தில் காட்டுவாரே ஒரு பாவம்.. ப்பா.. சூப்பர்..
அஞ்சலி இதுவும் விரும்பிப் பார்த்த படம்.. ரேவதியும், ரகுவரனும் வாழ்ந்திருப்பாா்கள்.. ரேவதியை முதன் முதலில் அம்மா என்று அஞ்சலிப் பாப்பா கூப்பிடுமே! சான்ஸே இல்லை.. அந்த வாண்டுகள்.. எந்திரி! அஞ்சலி எந்திரி வசனம் இதிலேயும் வரும்..
ரோஜா இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது ..அதில் வரும் தமிழா! தமிழா! பாட்டு கண்ணில் நீரை வரவழைத்து விடும்..பெண்களின் கனவு நாயக.............ன்.. அரவிந்த்..
பம்பாய் படமும் அவ்விதமே.. இதில் வரும் உயிரே பாட்டிற்கு பிறகு தான் ஹரிஹரன் என்ற அற்புதப் பாடகர் விரும்பியானேன்.. குழந்தைகள் தொலைந்து மறுபடியும் சேரும் காட்சி..மறக்க முடியாத படம் தான் இதுவும்..
இதற்கப்புறம் வந்த திருடா திருடா ரொம்பப் பிடித்த படம் ஏனோ அவ்வளவாக ஓடவில்லை.. ஹாசினியின் குரலை மிகவும் ரசித்த படம்.. பிரசாந்த் - ஹீரா, ஆனந்தையும், காமெரா அள்ளும்.. கொஞ்சும் நிலவு, ராசாத்தி, பாட்டுலேயும்.. புத்தம் புது பூமி வேண்டும் என் ஆல்ரைட் பேவரைட்..
கன்னத்தில் முத்தமிட்டால் படம் மறக்கவே முடியாது.. நந்திதா தாஸ், சிம்ரன், மாதவன், கீர்த்தனா, இலங்கை.. க்ளைமாக்ஸ்.. தெய்வம் தந்த பூவே.. இலங்கைத் தமிழ், போராடும் தாய்மை...
இருவர் படத்தில் அந்தக் கவிதை.. " உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே "..
ஏனோ இதற்கப்புறம் வந்த உயிரே! படம் மனதை விட்டு விலகி விட்டது.. அலைபாயுதே பிடித்திருந்தது.. அதற்கப்புறம் வந்த படங்கள் அத்தனையும் ஏமாற்றியவையே..!!
இசை பாதிப்படங்கள், இளையராஜா மீதி ஏ.ஆர். ரஹ்மான்.. எல்லாப்பாடல்களுமே, பிண்ணனி இசையுமே இன்று வரை மறக்க முடியாதவை.. மௌனராகம் தீம் மியூசிக் உதாரணம்.. டூட்டுட்டு டூடூ..
ஒளிப்பதிவும் அவ்விதமே.. அழகு கொஞ்சும்.. ( p.cஸ்ரீ ராம்,மது அம்பாட், ரவி. K.சந்திரன்)
கடைசியாக வந்த காற்று வெளியிடை இருவேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.. வரப்போகும் "பொன்னியின் செல்வனை"மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.என் ரசனையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற இந்தியாவின் தலைசிறந்த இயக்குனரின் சில நினைவலைகள்.. இன்று உங்களுடன்..

இசைஞானி இசைஅமைத்தவரை இவர் அசைக்கமுடியாத இயக்குனர்இசைஞானியை பிரிந்த பின்இவரின்வீழ்ச்சி ஆரம்பம் பாவம் இசைஞானியை வீழ்த்தனும்நினைத்து வீழ்த்தார்மனிதர்
தன்பெயரின்
பின்பாதி ரத்தினம் அந்த ரத்தினம்தான்திரைஇசை கன்டேடுத்த இசைஞானி மனியின்மறக்கமுடியதா படங்கள்பகல்நிலவு இதயகோயில் மௌனராகம் நாயகன் அக்கினி நட்சத்திரம் இதயத்தைதிருடாதே அஞ்சலி தளபதி இந்தபடங்களில்இடம் பெற்ற பாடல்கள்பின்னனி இசை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாது
மனிரத்தனம் தயாரித்த சத்திரியன் ஓருமெகஹீட்மூவி.

இளையராஜா வுடன் இருந்த வரையிலும் தமிழர் களுக்காக படம் எடுத்த வரையிலும் மணி ஜெயித்தார் என்றைக்கு ஹிந்தி காரனுக்கும் சேர்த்து படம் எடுக்க ஆரம்பித்தாரோ அன்றே விழுந்துவிட்டார்.

நாயகன் தவிர ஒரு படமும் சரியில்லாத சொல்லி கொள்ள ஏதும் இல்லாத படங்கள்.நாயகனும் சொந்த கற்பனையில் உதித்த கதை இல்லை.அது god father இன் தழுவல்.இவர் எடுத்த படங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிந்த கதையை மாற்றம் செய்து இருப்பார்.ஊடகங்களும்,நிறுவனங்களும்
சேர்ந்து நம் மூளையில் இவர் ஒரு பிரம்மாண்டமான இயக்குனர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விட்டார்கள்.

இளையராஜா என்ற சுரங்கத்தில் வைரங்களை மட்டுமே எடுக்கத் தெரிந்தவர் மணிரத்னம்.

ரோசா , பம்பாய் முஸ்லீம் களை தவறாக சித்தரித்தான்...அலைபாயுதே இளசுகளை கெடுக்க எடுத்த படம், ஓ காதல் கண்மணி, காற்றுவெளியிடை living together insist செய்யும்..நாயகனில் வரதராச முதலியாரை வேலு நாயக்கரகாக திரித்திருப்பான்...இவன் தமிழர்களுக்கு எதிரானவன்..இவடைப்பற்றி இவ்வளவு சிலாகிப்பு மேம்போக்கான பார்வை...

மகேந்திரன் படங்களை பார்த்து இருக்கீங்களா?????
May be an image of 1 person and smiling
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...