27 நட்சத்திரங்களையொட்டி 27 யோகங்கள் இருக்கின்றன. பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகும் புள்ளி 93 பாகை 20 கலை ஆகும். இந்தப் புள்ளியிலிருந்து முதல் யோகமான விஷ்கம்பம் தொடங்கி வரிசைக் கிரமமாக 27 யோகங்கள் இருக்கின்றன. இவற்றின் அளவும் நட்சத்திரங்கள் போலவே 13 பாகை 20 கலை என்பதால் ஒவ்வொரு யோகத்தின் அதிபதியாக அது விழும் புள்ளியிலிருக்கும் நட்சத்திரத்தின் அதிபதி அமைவார். அவரே பிறப்பு யோகி எனப்படுவார். அந்த நட்சத்திரம் விழும் வீட்டின் அதிபதி பிரதியோகி எனப்படுவார். அதாவது அவரும் நன்மை செய்வார். பிறப்பு யோகியின் நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 6ஆவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகி எனப்படுவார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, April 11, 2023
யோகி #அவயோகி கிரகங்கள்.
ஒவ்வொறு யோகி கிரகத்திற்கும் ஒரு அவயோகி கிரகம் உண்டு .
அவையாவன.
# சூரியன் யோகி − சனி அவயோகி.
# சந்திரன் யோகி − புதன் அவயோகி.
# செவ்வாய் யோகி −கேது அவயோகி.
# ராகு யோகி − சுக்கிரன் அவயோகி.
# குரு யோகி − சூரியன் அவயோகி.
# சனி யோகி − சந்திரன் அவயோகி.
# புதன் யோகி − செவ்வாய் அவயோகி.
# கேது யோகி − ராகு அவயோகி.
# சுக்கிரன் யோகி − குரு அவயோகி.
குறிப்பு :
ஜாதக ரீதியாக யோகத்தை செய்யும் கிரகம் அவயோகி கிரகமாக வந்தால் நிச்சயமாக யோகத்தை செய்யாது.
ஜாதக ரீதியாக தீமை செய்யும் கிரகம் யோகியா வந்தால் நிச்சயம் நன்மையை செய்யும்.
ஒருவரது ஜாதகத்தில் யோகி, அவயோகியாக வரும் கிரகத்தில்.. கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்.
1)கேது சந்திரன் குரு,
2) சுக்கிரன் செவ்வாய் சனி,
3) சூரியன் ராகு புதன்..,
இந்த அணியில் ஒரு கிரகம் யோகியாக இருந்தலும் மற்ற இரு கிரகங்களும் யோகியை போன்றே செயல்படும். இதே போல் மனிதர்களையும் மூன்று பிரிவாக கிரக அணிகளை கொண்டு பிரிக்கலாம்.
1) கேது சந்திரன் குரு யோகியாக உள்ளவர்கள் என்றும்
எதிலும் முழு நிறைவு அடையமாட்டார்கள்.
2) சுக்கிரன் செவ்வாய் சனி யோகியாக உள்ளவர்கள் என்றும் பொருளாதார வாழ்க்கை மட்டும்
வாழ்பவர்கள்.
3) சூரியன் ராகு புதன் யோகியாக உள்ளவர்கள் என்றும்
சேவை மனப்பான்மையுடன் வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும்,
இதில் முழுமையான ஈடுபாடு ராகு கிரகத்திற்கு உண்டு என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும். ஒருவருக்கு சூரியனோ, புதனோ பிறப்பு யோகியாக இருந்தால் ராகு அவர்களுக்கு இணையான நற்பலன்களைச் செய்வார்.
மேற்கூறிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன் ஏற்படும்..
குறிப்பாக கேது யோகியாக உள்ளவர்கள் அதிக அளவு மனரீதியான போராட்டங்களை வாழ்க்கை முழுவதும் சந்திக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment