Thursday, April 13, 2023

இன்று உலகமே அவர் பின்னால் நிற்கும் பொழுது, வித விதமான ஆடைகளை அணிவதில் என்ன தவறு ?

 நான் எந்தக் கட்சி ஆதரவாளனும் அல்ல. இந்த டிஸ்கியுடன் சொல்கிறேன்.

தற்போதைய பாரதப் பிரதமர் வித விதமான உடைகளில் ஃபோட்டோ ஷுட் கொடுப்பதில் ஆர்வம் உள்ளவராக உள்ளார்.இது எதிர்கட்சி ஆதரவாளர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிறது.
இதற்கு முன்னோடி பண்டிட் நேரு அவர்களே. நாள்தோறும் அவருடைய படம் நாளிதழ்களில் முதற்பக்கத்தில் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டார். அதுவும் வெவ்வேறு உடைகளில், வெவ்வேறு சூழலில். குதிரை சவாரி செய்வது போல் ஒருநாள் படம் வந்தால் மறுநாள் வேடர்கள் உடன் அம்பு விடும் படம் வரும்.
பண்டிட் நேருவிடம் ஏன் இப்படி விளம்பரப் பிரியராக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது
"நான் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறேன் என்பதை என் மக்கள் உணரவேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும டானிக்" என்றார்.
நேரு மேடையில் ஏறும் போது மெதுவாக ஏற மாட்டார்.இளைஞனைப் போல மூன்று படிகளைத் தாவிக்குதிப்பார். தடுப்புக்களை ஏறிக்குதித்து, செக்கியூரிடிகளைப் புறக்கணித்து ஆபத்தான சூழலில் மக்கள் நடுவிலே, கூட்டத்தின் நடுவிலே போய் நிற்பார். இதையெல்லாம் ஸ்டண்ட் என்று அந்தக்காலத்திலும் கூறியவர்கள் உண்டு.
அறிஞர் அண்ணா,எம் ஜி ஆர், ஜெயலலிதா, உடல் நலம் குன்றி இருந்த போது மக்கள் மனநிலையைக் கண்டோம்.
நேரு விற்குப் பின் இந்தியா என்னவாகும் என்று அன்று வினா எழும்பிய வண்ணம் இருந்தது. இராஜாஜி கூட நேரு மறைந்த போது இரங்கல் செய்தியில் " கடவுள் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும்" என்றார்.
நரேந்திர மோடி ஜிக்கும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெல்லும் திறனுள்ள எதிராளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மக்களுக்கு நம்பிக்கையூட்டும் படங்கள்,அது விளம்பரமாகவே இருந்தாலும் , ஒரு தலைவர் செய்யத்தான் வேண்டியுள்ளது.
நன்றி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...