ஒரு இசை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கோட்டு வாத்தியம் வாசிப்பதிலும் அவரது தாத்தா வயலின் வாசிப்பதிலும் சிறந்து விளங்கியவர்கள். மைசூரை பிறப்பிடமாக கொண்ட வி.எஸ்.நரசிம்மன் இளவயதிலேயே வயலின் கற்றுக்கொண்டார்.. மைசூரில் இருக்கும் பிரிமியர் ஸ்டுடியோ தயாரித்த படங்களில் வயலின் வாசித்து இருக்கிறார். பின்னர் 1958-இல் விஜயபாஸ்கர் இசை அமைத்த படங்களில் வயலின் வாசிப்பதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வர ராவ், பெண்டியாலா, அஸ்வத்தாமா போன்ற இசை அமைப்பாளர்கள் இசையில் வயலின் வாசித்து வந்தார். இந்த கால கட்டத்தில் வெஸ்டர்ன் இசையையும் கற்றுக்கொண்டார். இளையராஜா வாத்திய கலைஞராக இருந்த கால கட்டத்தில் பல இசை அமைப்பாளர்களிடமும் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அந்த பழக்கத்தால் இளையராஜா இசை அமைப்பாளராக உயர்ந்த போது அவருக்கு உதவியாளராகவும், வயலினிஸ்ட் ஆகவும் பணி ஆற்றினார். இளையராஜாவின் மாஸ்டர் பீசஸ் என்று சொல்ல கூடிய “How to name it?. “Nothing bit wind” போன்ற ஆல்பங்களிலும் ராஜ பார்வை போல பல படங்களிலும் ஒலித்தது இவரது வயலினிசை தான்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, April 11, 2023
இசை அமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்.
1984-ல் கே.பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற திரைப்படத்தின் மூலமாக இவரை இசை அமைப்பாளராக அறிமுக படுத்தினார். அத்திரைப்படமும் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றன. அதற்கு பின்னும் யார், புதியவன், கல்யாண அகதிகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கடைக்கண் பார்வை. இளம் கன்று, சின்ன மணிக்குயிலே என பல படங்களுக்கு அவர் இசை அமைத்தார். நல்ல தரமான இசையை கொடுத்தும் வெற்றி படங்களுக்கும் இசை அமைத்தும் கூட அவருக்கு போதிய அளவு படங்கள் கிடைக்கவில்லை. Most Underrated Music Director-களில் இவரும் ஒருவர்.
இவர் இசை அமைத்த பெரும்பாலான படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். தமிழில் கொஞ்சம் டல் அடித்தாலும் தெலுங்கில் நிறைந்திருந்த வாய்ப்புகளால் பி.சுசீலா மிகவும் பிசியாக இருந்தார். அதனால் நினைத்த நேரத்தில் வந்து பாட இயலாது. இவருக்கு பிடித்த பாடகி பி.சுசீலா என்பதால் பி.சுசீலாவுக்காக சில நாட்களோ வாரங்களோ ஆனாலும் கூட காத்திருந்து பி.சுசீலாவையே பாட வைப்பார்..
இவர் அறிமுகமான “அச்சமில்லை அச்சமில்லை” படத்தில் கதாநாயகி சரிதா பாடும் இரு பாடல்களையும் பி.சுசீலா பாடினார். அவ்விரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் ஆகின. “மேகத்த தூது விட்டா திசைமாறி போகுமோன்னு தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்” என துவங்கும் பாடல் கிராமிய மணம் வீசும் அருமையான வரிகளுடனும், இனிமையான இசையுடனும் ஒலித்த அருமையான தெம்மாங்கு பாடல். . அன்றைய கால கட்டத்தில் அடிக்கடி ரேடியோவில் ஒலிபரப்ப பட்ட பாடல்.
அதைப்போல் எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் ஜோடியாக பாடும் “ஆவாரம்பூவுஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு” என்ற பாடலும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்களில் ஓன்று.
80-களில் நிறைய வெற்றிப்படங்களை தயாரித்த கோவைத்தம்பி தயாரித்த இன்னொரு வெற்றிப்படம் தான் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”. அதுவரை அவர் படங்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்து வந்தார். அந்நிலையில் வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இசை அமைக்க வைத்து எடுத்த இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட். ஆனால் படம் படு தோல்வி. அதனால் வி.எஸ்.நரசிம்மனுக்கு போதிய வெற்றி கிட்டவில்லை.. இப்படத்தில் பி.சுசீலா பாடிய “ஆயிரம் பூக்கள்மலரட்டும்” என்ற இனிமையான பாடலை பி.சுசீலா பாடினார். படத்தில் பல சூழ்நிலைகளில் ஒலிக்கும் இந்த பாடல் பிரபலம் ஆனது
நடிகர் சரத்குமார் தயாரித்து நடித்த முதல் படம் கார்த்திக் – அம்பிகா நடிப்பில் வெளியான “கண் சிமிட்டும் நேரம்”. இப்படத்தில் “தானே பாடுதே மனம் எதையோநாடுதே” என மிகவும் இனிமையான பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்.
பாண்டியன் – இளவரசி ஜோடியாக நடித்த “கடைக்கண் பார்வை” என்ற படத்திலும் “விழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடும்” என்ற மிகவும் இனிமையான ஒரு டூயட் இடம் பிடித்தது.
“கடைக்கண் பார்வை” படத்தில் கிளைமேக்ஸில் இடம் பெரும் ஒரு உணர்ச்சி மிகும் சோகப்பாடலை ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். “ஏதோஒரு ராகம் ஏனோ அதில் சோகம்” என்ற அந்த மிகவும் அருமையான பாடல் என்றாலும் அதிகம் கவனிக்க படாமல் போனது.
கல்யாண அகதிகள் படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். அதில் இடம் பெற்ற “மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்” என்ற பாடல் வித்தியாசமான இசை அமைப்புடனும், அழகான வரிகளுடனும் கேட்க சுகமாக இருக்கும். அதே படத்தில் “வர வேண்டும் பெண்ணே வர வேண்டும்”. “கானல்அலைகளிலே”, “கல்யாண அகதிகள் நாங்கள்” என முழுக்க முழுக்க பி.சுசீலாவின் குரலால் நிறைந்திருந்தது. இத்திரைப்படம் “Aadavallu meeku Joharlu” என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அதிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.
விஜயகாந்த - அமலா நடிப்பில் வெளியான ஒரு படத்துக்கு பி.சுசீலாவின் குரலில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு பாடலின் தலைப்பை வைத்தார்கள். படத்தின் பெயர் “உன்னை ஓன்று கேட்பேன்”. இப்படி வைத்து விட்டு பி.சுசீலாவை பாட வைக்காமல் இருந்தால் எப்படி?! அமலா பாடுவது போல் அமைந்த “சின்ன கிளியே ஓ சொல்லு கிளியே” என்ற இனிமையான பாடலை கேட்க தவறாதீர்கள்.
கார்த்திக் – ரேகா நடித்த “சின்ன மணிக்குயிலே “ என்ற படத்திலும் “ என் ஜீவன் தேடும் தீபம் உன் பார்வையே” என்ற பாடலை எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் இணைந்து பாடினர்.
இனியராஜா என்ற படத்தில் “இரவும் பகலும் தழுவும் பொழுதும் நழுவும் பொழுதும்” என எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒரு டூயட் இடம் பெற்றது. அதே போல் “வா மழை மேகமே, தேன் புது ராகமே” என்ற பாடலும் பி.சுசீலாவின் தேன் குரலில் ஒலித்தது.
எண்ணிக்கையில் கொஞ்சமாக இருந்தாலும் எவ்வளவு நல்ல பாடல்கள்..!! இன்னமும் கொஞ்சம் அதிகமான படங்கள் அவருக்கு கிடைத்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது..
( இணையத்திலிருந்து)
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment