Thursday, January 4, 2018

இதுதான் #திமுக #எத்தனை #ஜென்மம் #எடுத்தாலும் #மாறாது!!

ஆயிரம் ரூபாயை பத்து ரூபாய் நோட்டாக மாற்றி ரோட்டில் நின்று வருகின்ற நூறு பேருக்கு உங்கள் பெயரைச் சொல்லி ஆளுக்கொரு நோட்டாக பத்து ரூபாய் கொடுத்தால் வாங்கியதும் வாழ்த்துவார்கள்,
மறுநாள் யாரிடமாவது சொல்வார்கள்,
அடுத்த வாரம் மறந்துவிடுவார்கள்,
ஒருவருடம் கழித்து யாரிடமும் அதன் நினைவுகூட இருக்காது,
அதே ரோட்டில் இரண்டு பேரை மறித்து பத்துரூபாயை வலுக்கட்டயமாகப் பிடுங்கினால்?
சாகும்வரை நினைவு வைத்திருப்பார்கள்,
உறவினர்கள்,நண்பர்கள் அனைவரிடமும் பகிர்வார்கள்,
இருபது ரூபாய் பிடுங்கிய விஷயம் பரவி உங்களைப் பார்த்தாலே பயப்படலாம்,அருவருப்படையலாம்,தூற்றலாம்,
இவன் எப்போதும் இப்படித்தான் என கெட்ட பெயர் மேலும் பரவலாம்,
இதுதான் திமுகவில் நடக்கிறது,
உண்மையிலேயே சில சாதனைகள் செய்தாலும் உடன்பிறப்புகளின் அட்டகாசம் எங்காவது ஒன்று நடந்து குழிக்குள் தள்ளிவிடும்,
திமுகவின் குட்டிக் கருணாநிதிகளை யாரும் எதுவும் செய்ய முடியாது,
நன்கொடை, மாமூல் என ஏதாவது ஒரு ஊரில் யாராவது ஒருவர் திமுக நிர்வாகியால் மிரட்டப்படுவது இன்றளவும் சகஜமாகவே இருக்கிறது,
இவர்களைப்பார்த்துத்தான் விடுதலை சிறுத்தைகள் பாட்டாளிமக்கள் கட்சிக்காரர்கள் எல்லாம் அப்பாவி வியாபாரிகளிடம் அதிகாரப்பிச்சை எடுக்கத் துவங்கி இன்றைக்கு வழிப்பறிவசூல் மாதமாமூல் என படிப்படியாக மக்களை மிரட்டி தாதா வாழ்க்கை வாழ்கிறார்கள்.
எல்லா அழிவுக்கும் மூலம் மு.கவும் திமுகவும் தான்.
திமுக வந்தால் அராஜகம் அதிகமாகிவிடும் என்ற பொத்தாம்பொதுவான கருத்து இன்னமும் விலகாத மர்மமும் இதுதான்,
நமது எம்ஜிஆர் பத்திரிகையில் நிர்வாகிகளைக் கட்டம் கட்டி நீக்கப்படும் செய்திகளை நிறையக்காணலாம்,
முரசொலியில் இதுவரை எத்தனை வந்திருக்கும்,
கட்சியை சுயபரிசோதனை செய்யாமல்,தவறு செய்து கொண்டிருக்கும் நிர்வாகிகளை நீக்காமல் ஆட்சியைப் பிடிப்பது என்பது ரொம்பவே கஷ்டம் ..

இன்னமும் கிராமங்களில் திமுக காரர்களைப்பார்த்தால் நல்லவன் வர்ரான் சொம்பை எடுத்து உள்ளே வை என்று சர்வ சாதாரணமாக பேசும் நிலை அப்பிக்கிடக்கிறது...
ஆநால் திமுகவினரோ கறை நல்லது என சோப்பு விளம்பர பாணியிலேயே இன்னமும் சொக்காய் மாட்டி திரிகிறார்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...