திருச்சியில் கனிமொழி சர்ச்சை பேச்சு பேசியிருக்கின்றார், "திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா?" என்று பேசியிருக்கின்றார்
இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை கொண்டுவராது, வெறும் கடவுள் மறுப்பு ஒருவோட்டு கொண்டுவராது என்றுதான் அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என ராகத்தை மாற்றினார்
கலைஞர் இப்படித்தான் பிராமணர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் அவர்களை சாடுவார் அந்த தொகுதிகளை சாமர்த்தியமாக கூடடணிகட்சிகளுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு அவர் இந்த நல்ல வேலையை செய்வார்.
இவரால் வரமுடியவி்ல்லை என்றால் கட்டாயம் வீரமணி
சுப வீ வெற்றிகொண்டான் ஆகியோரை அங்கு அனுப்புவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
சுப வீ வெற்றிகொண்டான் ஆகியோரை அங்கு அனுப்புவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
அப்படித்தான் ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெரோம் ஆரோக்கியராஜ் நின்றபொழுது முதல் நாள் முதல் கூட்டத்தை வீரமணியை வைத்து சாத்தார வீதியில் நடத்தினார்கள்...
பிள்ளையார் சுழியே அமங்களமாக சூப்பராய் போட்டார்கள்.
நாங்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் ஜெரோம் ஆரோக்கியராஜால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
திமுகவிடம் சர்க்கஸ் சிங்கம் ரிங் மாஸ்டருக்கு அடிபணிவது போல மண்டியிட்டு கிடந்தது காங்கிரஸ்.
கோடிக்கணக்கில் பணத்தை அதிகாரமாய் பிடுங்கி வைத்துக்கொண்டு பிடுங்கிக்கொண்டு காங்கிரஸில் ஆளே இல்லை என்ற சொத்தை வாதத்தை தினம் தினம் சொல்லி
மனதால் நம்மை சோர்வடையச் செய்து நம் காசை வைத்து நமக்கே நாமம் போட்டுவிடுவார்கள்.
ஸ்ரீரங்கத்தில் வீரமணி பேசினால் எவன் ஓட்டுப் போடுவான்? "ஜோலி சுத்தம்" என்று முதல் கோணலே முற்றும் கோணலாகிவிட்டது.
பாவம் ஜெரோம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்..
எல்லா திமுகவினரும் இம்மாதிரி விஷயங்களை கர்ண ஜாக்ரதையோடு கவனமாக கையாள்வார்கள்...
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஏன் இப்படி பேசிவிட்டார் கனிமொழி?
காணிக்கைக்கு காவல் என்பது அவர் கண்ணில் படுகின்றதே தவிர,
பெரும் காவல் செய்யும் அளவிற்கு பக்தர்கள் பணம் கொட்டினால், அந்த பக்தி எப்படி?
அவர்கள் பெற்றிருக்கும் பலன் எப்படி என ஏன் எண்ணிபார்க்கவில்லை
சும்மா கொட்டுவானா மனிதன்? நிச்சயம் அந்த தெய்வம் அவனுக்கு உதவியிருக்கும், அவன் அந்த பக்தியிலும், நன்றியிலும் அள்ளிகொடுக்கின்றான்
இவ்வளவிற்கும் அது ஆந்திராவில் இருக்கும் கோவில், அதனை பற்றி கனிமொழிக்கு என்ன வந்தது?
ஏம்மா கனிமொழி, இந்த வேளாங்கண்ணி ஆலயத்திலும் அதே காவல்தான், அதனைல பற்றி சொல்ல முடியுமா?
புட்டபர்த்தி சாய்பாபாவிடம் உங்கள் பெரியம்மா தயாளு ஆசிவாங்கினாரே, அங்கும் பணபெட்டிக்கு இதே காவல்தான்
ஆக இந்தமாதிரி திருப்பதி கேள்விகள் எல்லாம் இனி திமுகவிற்கு சிக்கலை கொண்டுவருமே தவிர திருப்பத்தை தராது அம்மணி...
கனிமொழி அக்கோவ். இங்கே பூஜை செய்வது எப்படி என அய்யரிடம் கேட்டுகொண்டிருப்பது யார் தெரியுமா?
கலைஞர் என்மகள் கனிமொழியின் தாய் என சொன்னார் அல்லவா? அந்த ராசாத்தி அம்மாள்..
என்ன செய்கின்றார் தெரியுமா? ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் இருந்து நீங்கள் வெளிவர சிறப்பு பூஜை நடந்ததாக சொல்ல பட்ட காலங்களில் வந்த படம் இது.
No comments:
Post a Comment