ரஜினி மீதான என் விமர்சனங்கள் அவர் தமிழரா இல்லையா என்பதை பொறுத்து அல்ல, சிறந்த நடிகரை சிறந்த அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ள முடியாமையின் வெளிப்பாடே.
தமிழக ஆணுக்கும் கன்னட பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை தமிழரா கன்னடரா ?
அல்லது
தமிழக பெண்ணுக்கும் கன்னட ஆணுக்கும் பிறக்கும் குழந்தை தமிழரா கன்னடரா ?
அக் குழந்தையை நான் தமிழராக பார்க்கிறேன், கன்னடர்கள் அக் குழந்தையை கன்னடராக பார்க்க வேண்டும், இது முரண்பட்ட பார்வையாக இருந்தாலும், இந்த பார்வையே அக் குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும், அக் குழந்தை ஓர் ஜாதி மறுத்த அல்லது மொழி கடந்த ஓர் தம்பதியரின் குழந்தை. மேலும் இத்தகைய உறவுகளே பிரிவினைகள் கடந்து சக மனித உறவுகளை வலுப்படுத்தும்.
தூய தமிழனை விட தூய மனிதனையே நான் அதிகம் நேசிக்கிறேன் ...
No comments:
Post a Comment