பங்கு சந்தை ,அந்நிய முதலீடு ,இவற்றுக்காகத்தான் எல்லா நாடுகளும் அமைதி விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்கின்றன.இந்தியாவும் விதி விலக்கல்ல.
நாட்டை காக்க உடனடி தேவை ராணுவத்தின் கைகள் சுதந்திரமாக விடப்பட வேண்டும்....தீவிரவாதத்தை ஒழிக்க மீண்டும் மோடி வரனும் என்கிறார்கள் இப்பவும் அவர்தானே இருக்கார்...44 ராணுவ வீரர்கள் பலி ...என்ன கொடுமை..? உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் 44 ராணுவ வீரர்களை ஒரு சின்ன தீவிரவாத குழு கொல்வதா..எவ்வளவு அவமானம் ?
நம் ராணுவ வீரர்கள் துடிப்பானவர்கள் மட்டுமல்ல.புத்திசாலிகள்....அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நன்கு தெரியும்.அவர்களுக்கு தேவை அனுமதி.அதை மட்டும் கொடுங்கள்..பொது மேடையில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்காதீர்கள்...ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் கண்ணீர் இந்தியர்களை கொதிக்க வைத்துக்கொண்டிருக்கிறது!!!
No comments:
Post a Comment