Saturday, February 16, 2019

தியாகம் செய்த வீரர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் கண்ணீர்துளிகளுடன்.

நம் இந்திய எல்லையிலே காவல் வீரனாய் ஆயிரம் ஆயிரம் கருப்புசாமிகள் .... ஆயுதமாய் தோட்டாக்களை கைகளில் ஏந்தி காவல் காக்கும் தெய்வங்கள்... நாட்டை தாக்கவரும் தீவிரவாதிகள் என்னும் பேய்களின் உடல்களை தோட்டாக்களால் சூறையாடும் கடவுள்கள்.... காடு ,பனி ,மழை என எண்ணாமல் இந்திய மக்களுக்காக உயிரையும் கொடுக்கும் மாவீரர்கள்.... தன் குடும்பங்களை பிரிந்து இந்தியர்கள் அனைவருக்கும் காவலாய் இருக்கும் காவல் தெய்வங்கள்... பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை போல .... வருடம் ஒருமுறை தன் குடும்பத்தை காணவரும் குறுஞ்சி மலர்கள்.... மகனை இழந்த பெற்றோர் .... கணவனை இழந்த மனைவி ... தந்தையை இழந்த குழந்தைகள் .. சகோதரன் சகோதரியை இழந்த இரத்த சொந்தங்கள்... எத்தனையோ உறவுகள் நம் மண்ணில் ... கடவுளே... அடுத்தப்பிறவி என்று ஒன்று இருந்தால் ஆண்மகனாய் நான் பிறவி எடுக்கவேண்டும்... இராணுவ வீரனாய் என் உயிர் பிரியவேண்டும் என் நாட்டிற்காக.... போர் தொடுக்கும் அரக்கர்களை தோட்டாக்களால் சூறையாட வேண்டும்.... மாவீரனாய் இம்மண்ணில் புதைய வேண்டும் .... இராணுவ உடையணித்து என் பிறவிப்பலனை அடையவேண்டும்... வேண்டிக்கொள்கிறேன் உன்னிடமே ... இந்திய நாட்டின் எல்லையில் இருக்கும் என் வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நல்விதமாய் நாடு திரும்ப... உருவாக வேண்டும் இந்நாட்டில் இன்னும் பல காவல் தெய்வங்கள்...

நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்த சகோதரர்களுக்கு இதய அஞ்சலி. ஒவ்வொரு உயிர் பலிக்கும் எதிரிகள் தக்க விலை கொடுத்தே ஆகவேண்டும். அரசு என்ன செய்ய செய்ய போகிறது. ஒவ்வொரு இந்தியரின் எதிர்பார்ப்பும் வீண் போக கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...