
உலகக் கோப்பை கிரிக்கெட் – 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் – 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
உலக அளவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (World Cup Cricket) நடைபெற்று வருகிறது. இந்த முறை 12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ( Australia ), இங்கிலாந்து ( England ), இந்தியா (India), தென் ஆப்பிரிக்கா (South Africa ), நியூசிலாந்து (NewZeeland ), பாகிஸ்தான் (Pakisthan), வங்காளதேசம் (Bangladesh), இலங்கை (SriLanka), ஆப்கானிஸ்தான் (Afkanishthan), மேற்கிந்திய தீவுகள் (West Indies) உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவி ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,
01. விராட் கோலி (கேப்டன்) – Virat Kohli (Captain)
02. ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்) – Rohit Sharma ( Vise Captain)
03. ஷிகர் தவான் – Shikhar Dhawan
04. கே.எல்.ராகுல் – K.L. Rahul
05. விஜய் ஷங்கர் – Vijay Shankar
06. தோனி (விக்கெட் கீப்பர்) – Dhoni (Wicket Keeper)
07. கேதர் ஜாதவ் – Kedar Jadhav
08. தினேஷ் கார்த்திக் – Dinesh Karthik
09. யுஸ்வேந்த்ரா சாஷல் – Yuzvendra Chahal
10. குல்தீப் யாதவ் – Kuldeep Yadav
11. புவனேஷ்வர் குமார் – Bhuvneshwar Kumar
12. ஜஸ்ப்ரித் பும்ரா – Jasprit Bumrah
13. ஹர்திக் பாண்ட்யா – Hardik Pandya
14. ரவிந்திர ஜடேஜா – Ravindra Jadeja
15. முகமது ஷமி – Mohammed Shami
ஆகியோர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment