Monday, April 1, 2019

இந்த வார விசேஷங்கள் 2.4.2019 முதல் 8.4.2019 வரை.

இந்த வார விசேஷங்கள் 2.4.2019 முதல் 8.4.2019 வரை


















2-ந்தேதி (செவ்வாய்) :

* பிரதோஷம். 
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப படிசட்டத்தில் பவனி.
* அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் ஆளேறும் பல்லக்கில் திருவீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்) :

* மாத சிவராத்திரி.
* கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று மாலை புஷ்ப யாகம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்) :

* அமாவாசை.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கேடய சப்பரத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி) :

* திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை.
* திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் பெரு விழா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்டநாதர் சேவை.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.


6-ந்தேதி (சனி) :


* தெலுங்கு வருடப் பிறப்பு.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்கார ரத உற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காலிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு) :

* ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி, இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா.
* சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்) :

* கார்த்திகை விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம், சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.
* கரிவலம்வந்தநல்லூர் சுவாமி யானை வாகனனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இரவு கோ ரதம், புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலம்.
* கீழ்நோக்கு நாள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...