Thursday, April 18, 2019

ராகு கால தேர்தல்: ராகுலுக்கு வாய்ப்பில்லை!

உள்ளங்கையில், 'மொபைல் போனை' வைத்து, உலக நிலவரங்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சியில், உலக நாடுகள் முன்னேறியுள்ளன. விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மெய்ஞானம் எனப்படும், ஜோதிடக்கலை அனைத்து நாடுகளிலும் வேறுான்றிஉள்ளது.

அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர், ஜோதிடர்களின் வழி நடப்பவராக இருக்கின்றனர். ஒரு சிலர், தங்கள் ஜாதக நோட்டு கிழிந்து போகும் அளவுக்கு, பல ஜோதிடர்களிடம் பேசி, நன்றாக ஆராய்ச்சி செய்த பிறகே, தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜாதக நோட்டு:
ஒன்பது கோள்களும், 27 நட்சத்திரங்கள் வழியாக, 12 ராசிகளில் சஞ்சாரம் செய்வதில், மாறி மாறி பலன்களை வழங்குவதை, ஆதாரத்துடன், ஜோதிடர்கள் முன் வைக்கின்றனர். லோக்சபா தேர்தல், ராகு காலத்தில் அறிவிக்கப்பட்டது முதலாக, அரசியல் கட்சியினர் ஜாதக நோட்டுடன் சுற்றியபடி இருக்கின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவுகள், விகாரி தமிழ் வருட பிறப்பு குறித்து, திருப்பூரைச் சேர்ந்த ஜோதிடர், 'மீனம்' ராஜு கூறியதாவது:

* லோக்சபா தேர்தலை, ராகு நேரத்தில் அறிவித்ததில் சூட்சமம் இருக்கிறது; ஆட்சி அப்படியே தொடர வேண்டுமெனில், ராகுவின் பலம் வேண்டும்; அதற்காகவே, ராகு நேரத்தில் அறிவிக்கப்பட்டுஇருக்கலாம்

* 'விகாரி' தமிழ் ஆண்டு பிறந்துள்ளதாலும், தேர்தல் நடப்பதாலும், 18ம் தேதி கிரஹ சஞ்சார அடிப்படையிலும், மத்திய அரசு அப்படியே தொடர வாய்ப்புள்ளது; அகில இந்திய அளவில், பெரிய மாற்றம் இருக்காது. தமிழகத்தை பொருத்தவரை, மாற்றம் வர வாய்ப்புள்ளது; குழப்பம் நீடிக்கும்

* பெண்கள், அரசியலில் ஆதிக்கம் செய்யும் நிலை இனிமேல் உருவாகும். 'விகாரி' தமிழ் வருடத்தில், சனி ராஜாவாகவும், சூரியன் மந்திரியாகவும் வருவதால், புதிய அரசு அமைந்தாலும், குழப்பம் அதிகம் இருக்கும்; ஒன்றுக்கு ஒன்று கருத்து வேறுபாடு இருக்கலாம்தர்மங்கள் மாறும்

* குறிப்பாக, ஒன்பது ஆதிபத்யத்தில், ராஜா, சேனாதிபதி உட்பட, சனி பகவான் நான்கு ஆதிபத்யம் பெறுகிறார். பகை கிரகங்கள் ஆதிபத்யத்தால், புதிய சட்டங்கள் வரும்; அரசியல் மாற்றம் இருக்காது. தமிழக அரசு மற்றும் மக்களுக்கு இடையே விரோத போக்கு நிலவும். உள்நாட்டு குழப்பம் நிலவும்

* மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பயன்பெறுவர்

* தமிழகத்தில், எதிர்க்கட்சிகளின் கரம் உயரும். எதிர்பாராத பிரச்னைகளை அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சில விவகாரங்களை பெரிதுபடுத்தி, சில தொகுதிகளில் தேர்தல் தள்ளிப் போகவும் வாய்ப்பு உள்ளது. 

ராகுல் பிரதமராகும் வாய்ப்பு தற்போது இல்லை. எதிர்காலத்தில் வாய்ப்பு வரலாம் 

* 'விகாரி' தமிழ் ஆண்டு பிறந்து, நடக்கும் தேர்தலால் அமையும் அரசு, யுகங்கள் தோறும், தர்மங்கள் மாறும் என்ற நிலையை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...