( வாட்ஸ் அப்பில் படித்தது சிரித்தது.
திரு.வை.கோ அவர்கள் சிறந்த தலைவர்தான்... மன்னிக்கவும்)
திரு.வை.கோ அவர்கள் சிறந்த தலைவர்தான்... மன்னிக்கவும்)
சனீஸ்வர பகவான் ஈசன் கிட்ட போனார் ...
ஈஸ்வரன் என்ற பெயர் உமக்கும், எனக்கும், ராவணனுக்கும் மட்டுமே இருக்கு ......
நீர் உமது புகழ்பாட முப்பத்து முக்கோடி தேவர்களை வைத்துள்ளீர்.
ராவணன் .... அவனோட புகழ்பாட ஒரு நாட்டையும், மக்களையும், ஒரு அமைச்சரவையும் வச்சிருக்கான் ....
நான் மட்டும் ஒண்டிக்கட்டையாக திருநள்ளார்ல தனியா இருக்கேன்.
அதுக்கு ? என்றார் ஈசன்.
நானும் எனக்கென்று ஒரே ஒரு அசிஸ்டெண்ட் வச்சிக்கறேன். அதற்கு தாங்கள் வரம் அருளவேண்டும் என்றார் சனீஸ்வரன்.
ஓ ... நீயும் ஒரு நாடு, ஒரு அரசு கேட்கின்றீரோ ?
இல்லை ஸ்வாமி. எனது பார்வைக்கு நிகரான சக்தி படைத்த மனிதர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவரை என் உருவில் நடமாட மட்டும் தாங்கள் அனுமதி தரவேண்டும் ....
யார் ? என்றார் ஈசன்.
அவர்தான் சர்வ வல்லமை கொண்ட வைகோ .....
ஓ ... அப்படியா ? அந்த கலிங்கப்பட்டி கர்த்தரா ?
ஆம் ஸ்வாமி ....
சரி ... வைத்துக்கொள். தமிழக அரசியல்வாதிகளிடம் மட்டும் அவர் அவரது பராக்கிரமங்களை காட்டட்டும். பொது மக்கள் பாவம். அவரை இவர் ஏதும் செய்யக்கூடாது.
அப்படியே ஆகட்டும் ....
அன்றுமுதல் சனீஸ்வர பகவான் தனது அசிஸ்டெண்டாக வைகோவை நியமித்துக்கொண்டார் ..
வைகோ அவதார மகிமை ....
No comments:
Post a Comment