Thursday, April 18, 2019

ஸ்டாலின் ஆலோசனை உதயநிதி பங்கேற்பு.

தமிழகத்தில், நேற்று நடைபெற்ற, 38 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளின் இடை தேர்தலில் நடந்த ஓட்டு பதிவு விபரம் குறித்து, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி களின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலர் களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் விசாரித்தார். 
 ஸ்டாலின், ஆலோசனை, உதயநிதி, பங்கேற்பு
அப்போது, ஸ்டாலினுடன், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச் சாவடியில், ஓட்டு பதிவு செய்த, அவர், கட்சி அலுவலகமான, அறிவாலயத்திற்கு வந்தார். அங்கிருந்த கட்சியினரிடம், சிரித்த முகத்துடன், ''நமக்கு சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன,'' எனக் கூறி, உள்ளேசென்றார்.

தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களிடம் இருந்து, தமிழகம் முழுவதுமிருந்து வந்த, ஓட்டுப்பதிவு விபரங்களை கேட்டறிந்தார். தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 
வேட்பாளர்கள் சிலரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொகுதி நிலவரம், ஓட்டுப் பதிவு சதவீதம் உள்ளிட்டவற்றை, ஸ்டாலின்விசாரித்தார்.

பின், தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுஉள்ள, வழக்கறிஞர்கள் சிலரை சந்தித்து,சில உத்தரவு களை பிறப்பித்துள்ளார். அதாவது, 'தென் மாவட்டங் களில், வி.ஐ.பி.,க் கள் போட்டி யிடும் தொகுதிகளில், ஓட்டுச்சாவடியை கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ள தகவல்வந்துள்ளது. இது பற்றி, தேர்தல் ஆணையத்திடம், புகார் செய்யுங்கள்' என்றார்.

பின், மாநில நிர்வாகி களிடம், ஸ்டாலின் ஆலோசனை நடத்தியபோது, மருமகன் சபரீச னும், மகன் உதயநிதியும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...