இந்திய சுதந்திரத்திற்கு பிறகு குறிப்பாக தமிழகத்தில் தனிநபர் தாக்குதலை தொடங்கியவர் தமிழக பகுத்தறிவு புலி, தமிழின காவலர், சீர்திருத்த செம்மல், சுயமரியாதை சிங்கம், ஊழலுக்கு நெருப்பு ,திராவிட போர்வாள், தன்மான தலைவர், ஆரிய எதிர்ப்பு ஆசான், இனமான வேங்கை என்று அறியப்பட்ட மறைந்த கருணாநிதி என்றால் மிகையில்லை - இதனை யாரும் மறுக்க யாராலும் முடியாது .
காமராஜரை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசினர். நம் மக்களுக்கும் அந்த தரம் தாழ்ந்த பேச்சு பிடித்து போய் கிறங்கி ஓட்டு போட்டு திமுக.வை வெற்றி பெற செய்தோம். அவர்கள், ஓ இது தான் மக்களுக்கு பிடித்து உள்ளது என சகட்டு மேனிக்கு வாயில் வந்தபடி எல்லோரையும் தராதரம் இல்லாமல் கேவலமாக பேசினார்கள். பேசி வருகிறார்கள். இது மக்களாகிய நாம் கொடுத்த தைரியம். எதிராளியின் கொள்கையோடு போட்டி இட முடியவில்லை எனில் தனி நபர் நிந்தனையை கையில் எடுப்பார்கள் இந்த திராவிடர் கழகத்தினர். எதிராளி மீது சுமத்த எந்த எதிர் மறை காரணமும் இல்லையென்றால், ஜாதியை குறை கூறி பேசி மக்களை மயக்குவார்கள்.
H.ராஜா வந்து இவர்களின் முக திரையை கிழித்து ஹிந்து மதம் இந்தியாவின் மதம் நாம் எல்லோரும் அதை சார்ந்தவர்கள். எனவே இந்து மதத்தை கேவல படுத்துபவர்களை சும்மா விடாதீர்கள் என முழங்கிய வூடன், அவர் கட்சி காவி கட்சி, தீவிரவாத கட்சி என பொய்பேசி நம்மை மயக்க பார்க்கின்றனர். மானமுள்ள இந்துக்கள் ஒருபொழுதும் இந்த தறுதலைகளுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
No comments:
Post a Comment