Monday, April 1, 2019

தொரை... நீ ஒண்ணும் செய்ய வேணாம் தொரை!

"கட்டுக் கட்டாப் பிடிபட்ட ரூபாய் நோட்ல ஒரு காசு கூட என்னுது இல்லை - இந்தக் காசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - இதை அப்படியே கொண்டுபோய் அரசாங்க கஜானாவுல சேருங்க - எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை"-... அவ்வளவுதான் தொரை... ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் விடு பார்ப்போம்!
அதைச் சொல்ல மாட்டேங்கறியே தொரை...
"மோடி பழிவாங்கிட்டாரு ; இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் BJP யோட கையாளு"- னு சீன் காட்றயே தவிர "இந்தப் பணம் என்னுது இல்லை - யார் வேண்டுமானாலும் SEIZE பண்ணிக்குங்க - அரசு கஜானால சேருங்க"- னு தில்லா ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறியே! இதே மத்தவங்களா இருந்தா இந்நேரம் நீ எத்தினி மிமிக்ரி பண்ணி சீன் காட்டிருப்ப தொரை!
தொரை... யோசிச்சுப் பாரு தொரை...
பெருந்தலைவர் காமராஜர் உத்தமமான மனுசன்! அவரைப் போயி ஆந்திரா பேங்குல "ஒரு கோடி ரூபாய் வச்சிருக்காரு"- னு சொல்லி திமுக காரனுங்க பிரசாரம் பண்ணீங்க! அவர் வாடகைக்குக் குடியிருந்த - அந்த வாடகையும் TT கிருஷ்ணமாச்சாரியோ, TVS ஐயங்காரோ தருவாங்க - திருமலைப் பிள்ளை ரோடு வீட்டை ஃபோட்டோ பிடிச்சு போஸ்டர் போட்டு "ஏழைப் பங்காளனின் சொகுசு பங்களா பாரீர்"- னு கூவினீங்க!
ஆனாக்க அந்த மனுசன் காமராஜர் மகா உத்தமன்! கை சுத்தக் காரன்! ஒரே வார்த்தைதான் சொன்னாரு: "அப்படியா நான் 'செக்' தரேன் - நீ போய் ஆந்திரா பாங்குல ஒரு கோடி வாங்கிக்க"- ன்னு தில்லா சொன்னாரு! ஏன்னா அந்த மனுசனுக்கு சட்டை பாக்கெட்ல பர்ஸ் கூட கிடையாது!
"ஏன் தலைவரே வழக்கமா அந்தத் தோள்லதானே துண்டு போடுவீங்க - இப்ப மாத்தி இந்தத் தோள்ல போட்ருக்கீங்க?"- னு ஒரு நிருபர் கேட்டப்போ, துண்டைத் தூக்கிக் காட்டி "அது ஒண்ணும் இல்லை தம்பி, கிளிசலை மறைக்கத்தான்"- னு சொல்லி அத்தனை பேரையும் கண் கலங்க வச்ச மகராசன் பெருந்தலைவர் காமராசர்!
நீ அவ்வளவு எல்லாம் பண்ண வேணாம் தொரை... உன்னால அப்படி எல்லாம் வாழவே முடியாதுன்னு தெரியும் தொரை...
ஒரே ஸ்டேட்மென்ட்.. "அந்தப் பணம் என்னுது இல்லை - அதை என்ன வேணாம் பண்ணிக்கோங்க!"- எங்கே தொரை சொல்லு பார்ப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...