Sunday, April 14, 2019

உறவின்முறையின் அணைப்பில் தமிழிசை.



தூத்துக்குடி தேர்தல் களம் திசைமாறிக் கொண்டு இருக்கிறது.தேர்தல் தேதி அறிவிக்கும் வரை என க்கு போட்டியே இல்லை என்று எகத்தாள த்துடன்
தூத்துக்குடி தொகுதி யில் வலம் வந்து கொண்டு இருந்த கனிமொழி இன்று பல கிராமங்களில்
உள்ளே நுழைய முடியாமல் துரத்தப்படுகிறார்.
ஆனால் இதற்கு நேர்மாறாக தேர்தல் அறிவிப்பு
வரும் முன்பே பிஜேபி அதிமுகவினரை ஊருக்கு ள் நுழைய விட மாட்டோம் என்று சூளுரைத்து
வந்த தூத்துக்குடி மக்கள் இன்று தூத்துக்குடி
தொகுதியின் பிஜேபி வேட்பாளராக போட்டியிடும்
தமிழிசையை ஆரத்தழுவி முத்தமிட்டு வருகிறார்
கள்.
எதனால் இந்த மாற்றம் உருவானது? தமிழிசை
இந்த மாற்றம் உருவாக என்ன செய்தார்? இந்த
மாற்றம் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில்
வெற்றி பெற வைக்குமா என்று விடை தேடிச்
செல்வோம்.
கனிமொழி ஏன் தூத்துக்குடி யில் போட்டி யிடு
கிறார்? சென்னையில் வசிக்கும் அவர் நினைத்தா ல் தென் சென்னை தொகுதியிலேயே போட்டி
இட்டு இருக்க முடியும். ஆனால் கனிமொழி ஏன்
தூத்துக்குடி நோக்கி சென்றார்?
தென்சென்னையில் உள்ள சாலி கிராமத்தில் வசிக்கும் தமிழிசை ஏன் சென்னையில் உள்ள
லோக்சபா தொகுதியில் தென் சென்னையை
அதிமுக விட்டு கொடுக்க வில்லை என்றாலும் வட சென்னையில் போட்டியிடாமல் தூத்துக்குடி நோக்கி ஏன் சென்றார்? இதற்கு ஒற்றை வார்த்தை யில் பதில் கூறினால் சாதி உணர்வு
என்றே கூற முடியும்.
கனிமொழி தமிழிசை இருவருமே தூத்துக்குடி யை நோக்கி செல்ல முக்கிய காரணம் அங்கு
நாடார்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதால்
தானே தவிர கட்சி செல்வாக்கு எல்லாம் அடுத்த
பட்சம் தான்.
சரிப்பா.. கனிமொழி நாடாரா? என்று நீங்கள்
கேட்கலாம்.. நிச்சயமாக இல்லை ஆனால் நாடார் என்றே அவர்கூறிக்கொண்டு நாடார் சங்கத்தின்
மாநாடுகளில் கலந்து கொண்டு வருகிறார். அவரின் அம்மா நாடார் என்பதாலே கனிமொழி
நாடாராகி விட முடியாது.
நம்முடைய சமுதாயம் தந்தை வழி சமுதாயம் என்
பதால் கனிமொழி நிச்சயமாக நாடார் என்று
கூற முடியாது. இருந்தாலும் பெரியாரின் சாதி
ஒழிப்பு தான் திமுகவின் கொள்கை என்று அவ்வ
ப்பொழுது காமெடி செய்து கொண்டே கனிமொழி
யும் நாடார் சங்க மாநாடுகளில் கலந்து கொண்டு
தனக்கு ஒரு இன அடையாளத்தை உருவாக்கி
கொண்டார்.
இந்த அடையாளம் தனக்கு கை கொடுக்கும்
என்கிற நம்பிக்கை யில் தான் நாடாராக உருவா க்கப்பட்ட கனிமொழி தூத்துக்குடியை தேடி
ஓடி நிற்க அங்கே தனக்கு போட்டியாக நாடார்
சமுதாயத்தில் இருந்து உருவாகி வாழையடி வாழையாக அரசியலில் இருக்கும் தமிழிசை
அவர்கள் போட்டியாக வருவார் என்று நினைத்து
இருக்க மாட்டார்.
அப்படியே நினைத்து இருந்தாலும் தமிழிசையின் 
போட்டியை கனிமொழி ஒரு பொருட்டாக நினை
த்து இருக்க மாட்டார். ஏனென்றால் தூத்துக்குடி
தொகுதியை சுற்றி கடந்த இரண்டு வருடங்களாக
கனிமொழி உருவாக்கி வைத்து இருந்த சாதி
அரவணைப்பும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆதரவும்
அவரை வருங்கால தூத்துக்குடி எம்பி என்கிற
கனவுடன் வலம் வர வைத்தது.
தூத்துக்குடியில் தன்னை எதிர்த்து அதிமுக போட்டியிட்டால் குறைந்தது ஒரு லட்சம் வாக்கு
கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடலாம்
என்று நினைத்து இருந்த கனிமொழிக்கு தன்னை எதிர்க்க வருபவர் ஆர்கே நகரில் நோட்டா விடம் தோற்றுப்போன ஒரு கட்சியின்
தலைவி என்றவுடன் சந்தோசம் தாங்க வில்லை.
சந்தோசத்தில் தன்னுடைய கைத்தடிகளிடம்
எப்படியும் தமிழிசையை 3 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வீழ்த்துவேன் என்று ஆணவ த்துடன் முழங்கிவந்த கனிமொழி இப்பொழுது
தன்னுடைய அம்மாவிடம் எப்படியாவது 3 ஆயிரம்
ஓட்டு வித்தியாசத்திலாவது ஜெயிக்க வைக்கும்
படி திருச்செந்தூர் முருகனை வேண்டி கொள்ளு ங்கள் என்று அவருடைய அம்மாவை முருகன்
ஆசி பெற வேண்டி அனுப்பிக் கொண்டு இருக்கி றார்
தமிழிசை தூத்துக்குடி யில் நுழைந்தவுடன் உரு
வான கனிமொழி நாடாரா? என்ற கேள்வி தூத்து க்குடியை சுற்றி உள்ள கிராமங்களில்படு வேக மாக பரவி கனிமொழியின் நாடார் இன ஆதரவை
காலி செய்தது இதற்கு முக்கியமான காரணம்
கனிமொழி மேல் தட்டு அரசியல்வாதி யாக உலா வருகிறார் தமிழிசையோ தூத்துக்குடி மக்களின்
அடையாளத்துடன் அவர்களில் ஒருத்தியாக
வலம் வருகிறார்.
இந்த அளவிற்கு தூத்துக்குடி தொகுதியின்
கள நிலவரம் தமிழிசைக்கு சாதகமாக மாற யார்
காரணம் என்றால் முதலில் அவர் சார்ந்த நாடார்
சமுதாய மக்களின் ஆதரவு அடுத்து அதிமுக
தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவு
தமிழிசையின் கடுமையான உழைப்பு வேட்பாளர்
நம்மில் ஒருத்தி என்கிற தோற்றம் என்று அடு 
க்கிக்கொண்டே செல்லலாம்.
இருந்தாலும் தமிழிசைக்கு முதலில் அவர் சேரந்த
நாடார் இனத்தின் ஆதரவு அதிகமாக இருக்கிறது
அடுத்து அதிமுகவின் ஆதரவு தூள் கெளப்புகிறது
கூடவே தூத்துக்குடியில் உள்ள ஏனைய தேவே ந்திரகுல வேளாளர் கள் நாயுடு இனமக்கள் ரெட்டியார் மற்றும் பிள்ளைமார் இன மக்களின்
ஆதரவும் தமிழிசைக்கே கிடைப்பதால் தூத்துக்கு டியின் எம்பியை தேர்ந்தெடுக்க நடைபெறும்
போட்டியில் முதல் இடத்திற்கு வந்து விட்டார்
தமிழிசை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...