தேர்தல் என்பதை ஒரு மாபெரும் சந்தையாக ஆக்கியிருக்கின்றன கட்சிகளும் கட்சிகளை இயக்கும் புற அமைப்புகளும்.
பணம் இல்லாதவர்களுக்கு தேர்தலில் வேலையில்லை என்கிற நிலையை தேர்தல் அரசியலின் ஓர் முக்கிய அம்சமாகவே ஆக்கிவிட்டார்கள்.
பணமுள்ளவர்களுக்கே வாய்ப்புகளும் கிடைப்பதால் குற்றவாளிகளே பெரும்பாலான வேட்பாளர்களாக நமக்கு கிடைக்கிறார்கள்.
பணம் கொடுத்து சீட்டு வாங்குகிறவன், பணம் கொடுத்துதான் ஓட்டு வாங்குவான். இதையெல்லாம் ஒரு மாதத்திற்கு மட்டும் தீவிரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்திட முடியாது.
சமூகம் ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டால் அதை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. தேர்தலில் நிகழும் பணவோட்டம் அத்தகைய சமூக அங்கீகாரம் பெற்ற குற்றமாகிவிட்டது.
மாற்று அரசியல் பேசுவோர்களும் கூட கூட்டணி தர்மங்களால் இந்த குற்றத்திற்கு துணைபோகும் நிலைதான் தொடர்கிறது.
இப்படியே தொடரும் பட்சத்தில் ஜனநாயகத்திற்கு பெருங்கோவம் வந்து விடும். அப்படி தேசமே செந்நீரில் மிதக்கும் காலம் வருவதற்குள் நாடு தம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment