Saturday, April 13, 2019

நடிகர் ரித்திஷ் (EX.M.P) மாரடைப்பால் காலமானார்.

நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

ஏற்கனவே அவருக்கு இதய பிரச்னை இருந்து, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்பின்னர் உடல்நிலை தேறிய நிலையில் அதிமுக.,விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். இன்றும் (ஏப்.13) அவர் ராமநாதபுரத்தில் பல பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் உணவருந்தி ஓய்வெடுத்த போது, மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு, ரித்திஷை, உறவினர்கள் அழைத்து சென்றனர். வழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.





குழப்பம்

பின்னர் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு, இதய துடிப்பு உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கவே, மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்திஷ் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். அவரது மறைவுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




வாழ்க்கை வரலாறு

1973ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி, இலங்கையில் பிறந்து, பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்தவர் ரித்திஷ். இவரது இயற்பெயர் முகவை குமார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், சமீபத்தில் வெளியான எல்கேஜி போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார். கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக., கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்.பி.ஆனார். பின்னர் பதவிக்காலம் முடிந்த பின்னர் அந்தக் கட்சியை விட்டு விலகி அதிமுக.,வில் இணைந்தார்.
ரித்திஷ், Riteesh
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ரித்திஷ், நடிகர் சங்கம் சார்பில் விஷால் அணி களமிறங்கிய போது, அவரை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்தார். பின்னர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டியிட்ட போது அதில் ஏற்பட்ட மனகசப்பால் விஷாலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் பூட்டு போட்ட விவகாரம் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னையின் போது முன் நின்று குரல் கொடுத்தவர் ரித்திஷ். ரித்திஷிற்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற 11 வயது மகனும் உள்ளனர்.

ரித்திஷின் உடல் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை(ஏப்.,14) நடைபெறுகின்றன. ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம், திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...