Saturday, September 21, 2019

அக்.,21 தமிழகத்தில் 2 தொகுதி இடைத்தேர்தல்.

அக்டோபர் 21 ல் ஒரே கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
அதே நாளில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறுகையில், அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முறையே நவ.,2 மற்றும் நவ.,9 ல் முடிவடைகிறது.
அரியானாவில் 1.82 கோடி மற்றும் மகாராஷ்டிராவில் 8.94 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு தொகுதிக்கு ரூ.28 லட்சம் செலவு செய்யலாம். பண பட்டுவாடாவை தடுக்க கண்காணிக்க ஏற்பாடு. வேலூர் தேர்தலுக்கு சென்ற 2 கண்காணிப்பாளர்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர். என்றார்.


தேர்தல் தேதி விபரம் :

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.





சட்டசபை தேர்தல் விபரம் :

செப்.,23 வேட்புமனு தாக்கல் துவக்கம்அக்.,4 வேட்புமனு தாக்கல் நிறைவுஅக்.,5 வேட்புமனுக்கள் சரிபார்ப்புஅக்.,7 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்அக்.,21 ஓட்டுப்பதிவுஅக்.,24 ஓட்டு எண்ணிக்கை

64 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் :

செப்.,23 வேட்புமனு தாக்கல் துவக்கம்செப்.,30 வேட்புமனு தாக்கல் நிறைவுஅக்.,1 வேட்புமனுக்கள் பரிசீலனைஅக்.,3 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதிஅக்.,21 ஓட்டுப்பதிவுஅக்.,24 ஓட்டு எண்ணிக்கை


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...