Friday, September 20, 2019

அரசன் அன்றே கொள்ளுவான் தெய்வம் நின்று கொள்ளும்.

“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”
கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!
எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?
கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”
வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..
மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.
சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.
கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...