Wednesday, September 4, 2019

குக்கரில் சமைத்த உணவினை சாப்பிடுவதால் உள்ள மருத்துவ ரீதியான தீமைகள் என்ன?

"இத்தாலியின் 'ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்' (journal of food science) நிறுவன ஆராய்ச்சிப்படி,
#வேக_வைத்தல் (boiling) முறையில் உணவு தயாரிப்பதால் 40-75 சதவீதமும்,
#வறுத்தெடுத்தல்(roasting) முறையில் 53-90 சதவீதமும்,
#ஆவியில் (steaming) முறையில் 75-90 சதவீதமும்,
#பிரஷர்_குக்கரில் சமைப்பதால் 90-95 சதவிகித ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது".
பிரஷர் குக்கரில் உணவு சமைப்பது நல்லதுதான். ஆனால் எந்த #மெட்டலால் ஆன #குக்கரில், எவ்வளவு #காலம் சமைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது பிரச்னையின் தன்மை.
அலுமினியம், காப்பர்(Copper), எஸ்.எஸ்.ஸ்டீல்(stainless steel), டைட்டானியம்(Titanium) எனப் பலதரப்பட்ட மெட்டல்களிலும் பிரஷர் குக்கர்கள் செய்யப்படுகின்றன.
இவற்றில் அலுமினியம் பிரஷர் குக்கர்தான் விலை குறைவானது.
குறிப்பாக எஸ்.எஸ்.ஸ்டீல், காப்பர் மற்றும் டைட்டானியம் மெட்டல்களினால் ஆன பிரஷர் குக்கர்களில் சமைக்கும்போது, #உணவுகளில்_கலக்கும்_மெட்டல்களின் அளவு மிகக்குறைவுதான்.
இதனால் இத்தகைய மெட்டலால் ஆன பிரஷர் குக்கரில் சமைப்பதால் #ஆபத்து #இல்லை.
அதேசமயம் அலுமினிய குக்கரில் உணவு சமைக்கும்போது ஒரு நாளைக்கு 1-2 மில்லி கிராம் #அலுமினிய_மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்க வாய்ப்புள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) அறிக்கை ஒன்றில், நாம் உணவு சமைக்கும் பாத்திரங்களில் இருந்து ஒரு நாளுக்கு 50 மில்லி கிராம் அளவிலான மெட்டல் நம் உணவில் கலக்கலாம்.
இந்த அளவை மீறி #மெட்டல்_கலந்தால் மட்டுமே ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. #இதனால்_அச்சப்படாமல் அவரவர் திறனுக்கு ஏற்ற பிரஷர் குக்கர்களில் #உணவு_சமைக்கலாம்.
அதேசமயம் பிரஷர் குக்கர் மற்றும் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவற்றில் #கீறல்கள்விழுந்திருந்தாலும் விழாவிட்டாலும் அவற்றில் உணவு சமைப்பதைத் #தவிர்க்க #வேண்டும்.
மாறாக கீறல் விழுந்த பாத்திரங்களில் உணவு சமைப்பதால் அதிகமான மெட்டல் #உணவின்_வாயிலாக நம் உடலில் கலக்கும் #ஆபத்து_இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...