Wednesday, September 4, 2019

அது தான் தமிழகத்தின் தனிச் சிறப்பு,மாறுமா, மாற்றம் வருமா ?

*எனக்கு அரசியல் ஞானம் குறைவு.ஆனால் Mr.பொதுஜனத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.*
1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் *கலைஞர் TV* ஓடுகிறது.
2.ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் *பசுமை வீடு* மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3.இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் *அனாதைப் பணம் 1000* பெறுகிறார்கள்.
4.காரில் சென்று *இலவச சேலை* பெறுகிறார் ஒரு பெண்.
5.IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் *ரேஷன்கார்டு படி தாலிக்கு தங்கம்* பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் *வீட்டுவரி ரூ350.* அதாவது 20 வருடத்திற்குமுன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக *ரேசன் பொருளைவசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.*
*மானிய சிலின்டர்களை* கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
8.பைனான்ஸ்+சீட்டுகள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் *Income #Tax* என்றால் என்ன? என்கிறார்.
9.சென்சஸ் எடுக்கப்போனோம்.
மாதவருமானம் 4000,5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல்பொய்சொல்கிறது. அப்பத்தான் *சலுகைகள்* கிடைக்குமாம்.
10. இதெல்லாமே என் தெருவில் நடக்கும் *உதாரணங்கள்.*
கடைசியாக *4கட்சியிடமும் பணம்* வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் *Mr.பொதுஜனம்.*
*1) முறையாக வரி செலுத்தும்,சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.*
*2) ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி.*
*3) லஞ்சம் வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.*
நாடு உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது.
எப்படி திருத்துவது.
சட்டத்தின் வழியா?? சர்வாதிகாரமா?? கல்வியா??
ஆன்மீகமா?? எதைக்கொண்டு எதைத் திருத்துவது??
*எனக்கு அரசியல் ஞானம் குறைவு.*
எனவே நீங்கள் விடை சொல்லுங்கள். நாடும் மக்களும் நல்லா இருக்கட்டும்.💐💐
*தீதும் நன்றும் பிறர்தர வாரா*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...