அது 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு சிறு நகரம். அங்கு ஆண்கள் அனைவரும் லுங்கியும், நீண்ட ஜிப்பாவும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். இரண்டு வயது குழந்தையின் தலையில்கூட குல்லா இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருப்புத்துணி அணிந்து கொண்டுதான் வருகிறார்கள்.
அந்த நகரில் உள்ள நீண்ட கடைவீதியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மின்னுகிறது. தெருக்களின் பெயர்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகளின் பெயர்களும் உருது மொழியிலே எழுதப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஒரே நூலகத்தில் குல்லா அணிந்த இஸ்லாமிய இளைஞர்கள் உருது பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் உருது மொழியிலேயே பேசுகிறார்கள்.
அங்கு உள்ள பள்ளிக்கூடங்களில் உருதுதான் முக்கிய பாடம். உருது மொழிப் பாடலை ஆசிரியர் பாட, முஸ்லிம் சிறுவர்களும், சிறுமிகளும் உரக்கப் பாடுவது அந்த வழியாகச் செல்பவர்களின் காதுகளைக் கிழிக்கிறது.
நகரில் எங்கு பார்த்தாலும் மிகப்பெரிய கட்டடங்களும், அரபுக் கலைநுணுக்கங்களுடன் பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்ட மசூதிகளும் அவர்களின் செல்வ வளத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த சிறு நகரில் இத்தனை மசூதிகளா? என்று நாம் ஆச்சரியப்பட்டு கேட்டால், உலகத்திலேயே ஐந்தாவது பெரிய மசூதி இங்குதான் இருக்கிறது என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் சொல்கிறார்கள். (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை).
அந்த நகரம் பாகிஸ்தானிலும் இல்லை, ஆப்கானிஸ்தானிலும் இல்லை. நமது தமிழகத்தில், அதுவும் தலைநகர் சென்னையில் இருந்து 3 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்த அதிர்ச்சி நகரத்தின் பெயர் மேல்விஷாரம். வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் ஆற்காட்டிற்கு அருகே இருக்கிறது இந்த நகரம். பேரூராட்சியாக இருந்த மேல்விஷாரம் 10 மாதங்களுக்கு முன்புதான் மூன்றாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது.
இந்த மேல்விஷாரம் நகராட்சியில் 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரம் என்ற ஊரும், 10,000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம் என்ற ஊரும் இருக்கிறது.கடந்த மார்ச் 18, 19 தேதிகளில் ஈரோட்டில் நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் மேல்விஷாரம் பேரூராட்சியில் இணைக்கப்பட்டுள்ள இராசாத்துபுரம் என்ற தனி வருவாய் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் அங்கு என்னதான் நடக்கிறது என்று அறிவதற்காக மேல்விஷாரத்திற்கும் இராசாத்துபுரத்துக்கும் சென்றோம். நாங்கள் முதலில் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரத்திற்கு சென்றோம். பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஏதோ பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதிக்கு வந்துவிட்டதைப் போன்ற ஒரு பிரமை எங்களுக்கு ஏற்பட்டது. அப்போது நாங்கள் கண்ட காட்சியைத்தான் இந்தகட்டுரையின் ஆரம்பத்தில் வர்ணித்துள்ளோம். மேல்விஷாரம் நகராட்சியில் தீர்மானங்கள் உருது மொழியில் நிறைவேற்றப்படுகின்றன. அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியிலும் உருது பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது
மேல்விஷாரத்தை நாங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வலம் வந்தோம். ஆனாலும் அங்கு முஸ்லிம் அல்லாத ஒருவரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. முஸ்லிம் தெருக்களில் நாங்கள் உலா வந்தபோது வழிபாடு நடக்காத ஒரு சிறிய கோயிலைப் பார்த்தோம்.
அந்தக் கோயில் இருக்கும் தெருவில் சுமார் 10 இந்துக் குடும்பங்கள் வசிக்கிறார்கள். அந்த 10 வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கோயில் அருகே வாசலில் கோலமிடப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். 25வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கதவைத் திறந்து மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். இது என்ன கோயில்? என்று மெதுவாகக் கேட்டோம். எனக்குத் தெரியாது என்று கூறி மெல்ல கதவைச் சாத்திக் கொண்டார்.
பயமும் அச்சமும் அவரது கண்களில் தெரிந்தது. பிறகு என்ன நினைத்தாரோ, மீண்டும் கதவைத் திறந்து ரோட்டிற்கு வெளியே ஆற்றங்கரையில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்கு விசாரித்தால் சொல்வார்கள் என்று கூறி மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டார். மேல்விஷாரத்தில் யாரிடம் எதைக் கேட்டாலும் `தெரியாது' என்ற வார்த்தைதான் பதிலாக வருகிறது.
நாங்கள் அங்குள்ள கிளை நூலகத்திற்குச் சென்றிருந்தோம். `த ஹிந்து' நாளிதழை தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் இளைஞரிடம் நகராட்சி அலுவலகம் எங்கிருக்கிறது? என்றோம். தெரியாது என்று பதிலளித்தார். பிறகு அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் என்பது தெரிந்தது. ஒரு என்ஜினீயரிங் மாணவருக்கு அவரது நகராட்சி அலுவலகம் எங்கிருக்கிறது என்பது எப்படி தெரியாமல் போகும்?
புதிய நபர்களுக்கு எந்த தகவலும் சொல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற உண்மையை ஒருவர் நம்மிடம் ஒப்புக்கொண்டார். மேல்விஷாரத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஜூஸ் கடை வைத்திருக்கும் அம்ஜத் உசேனிடம் சாத்துக்குடி ஜூஸ் குடித்துக்கொண்டே பேச்சுக் கொடுத்தோம். இராசாத்து புரத்தை தனி ஊராட்சியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அங்கு பேனர் வைத்துள்ளார்களே என்ன பிரச்சினை என்று கேட்டோம்.
நாங்கள் (முஸ்லிம்கள்) நடத்தும் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியும், ஒரு கலை அறிவியல் கல்லூரியும் இராசாத்துபுரம் பகுதியில் இருக்கிறது. இப்போது இராசாத்துபுரத்தில் உள்ள வன்னியர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தனி ஊராட்சியாக பிரித்து விட்டால், கல்லூரி விஷயமாக நாங்கள் அவர்களிடம் செல்ல வேண்டியதிருக்கும். எனவே இராசாத்துபுரம் தனி ஊராட்சியாகப் பிரிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார். அவரது பேச்சில் இருந்த உறுதி எங்களை ஆச்சரியப்பட வைத்தது. முஸ்லிம் ஜமாத்தின் முக்கியத்துவத்தை நமக்கு அவர் விவரித்தார்.
மேல்விஷாரம் நகராட்சியில் கட்டடத் திறப்புவிழா போன்ற முக்கிய விழாக்களில் முஸ்லிம் ஜமாத் தலைவர்கள்தான் கலந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மேல்விஷாரம் ஒரு சொர்க்க பூமி. அங்கு மெக்காவிலிருந்து ஒரு இமாம் அடிக்கடி வந்து போகிறார்.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பல தோல் தொழிற்சாலை அதிபர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். ஆனால் சொர்க்கத்திலும் நரகத்தை அனுபவிப்பவர்கள் இருக்கத்தான செய்கிறார்கள். முஸ்லிம் பெண்கள்தான் அந்த பரிதாபத்திற்குரியவர்கள். வருடத்தில் 10 மாதங்களுக்கு மேல் கடும் வெப்பம் நிலவும் அந்த பகுதியில், உடல் முழுக்க கருப்புத் துணி அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். மர்ம தேசத்திற்குள் நடமாடும் மர்ம தேசங்கள் இவர்கள்.
No comments:
Post a Comment