Tuesday, September 17, 2019

தாமரை கோபுரம் (lotus tower) கொழும்பு,ஸ்ரீ லங்கா.

* 356 மீற்றர் உயரம், 4 நிலக்கீழ் மாடிகள்
* 90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்
* 10 ஏக்கர் விஸ்தீரண நிலம்
* 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி
* 50 வானொலி நிலையங்கள்
* 50 தொலைக்காட்சி நிலையங்கள்
* 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி
தெற்காசியாவின் அதிஉயர்ந்த கோபுரமாக வியந்து பார்க்கப்படுகிறது தாமரைக் கோபுரம். நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரதும் கண்களுக்கும் தொலைதூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரை தாமரைக் கோபுரம் என்பது இனிமேல் சிறப்பு அடையாளமாகவே விளங்கப் போகிறது.இக்கோபுரம் இன்று திறப்பு விழா கண்டது(செப் 16 2019)
தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் 18வது இடத்தில் இருக்கிறது இக்கோபுரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...