Sunday, September 1, 2019

காஷ்மீரில் ஆதார் கட்டாயம்- மத்திய அரசு அடுத்த அதிரடி.

காஷ்மீரில் ஆதார் கட்டாயம்- மத்திய அரசு அடுத்த அதிரடி
ஆதார் அட்டை













காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 6-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
அதோடு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதிக்குள் இந்த பணிகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.
அதன்பிறகு காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய அரசு கையில் எடுக்க உள்ளது. காஷ்மீர் மக்களிடம் 100 சதவீதம் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வருவதன் மூலம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் என்றும், மத்திய அரசின் நல திட்டங்களை காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
காஷ்மீரில் தற்போது 78 சதவீதம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அதை அக்டோபர் 31-ந்தேதிக்கு பிறகு 100 சதவீதம் முழுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. என்றாலும் மக்கள் மத்தியில் இன்றும் 22-வது நாளாக பீதி காணப்பட்டது.
இன்றும் காஷ்மீரில் சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. பெரும்பாலான பகுதிகளில் மருந்து கடைகளும் மளிகை கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.
வாகன போக்குவரத்து இன்னமும் முழுமையாக சீரடையவில்லை. முக்கிய சாலைகளில் வாகனம் குறைந்த அளவே ஓடியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...