Sunday, September 1, 2019

முகஸ்டாலின்_கவனத்திற்கு.

திட்டமிட்டே, அனுமதி பெறாமல் பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து அராஜகம் செய்த பியுஷ் மனுஷ் எனும் பித்துக்குளிக்கு ஆதரவாகவும் பாஜகவினரைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின்.
பரபரப்பான அந்தக் காலகட்டத்தில், சென்னை சைதாபேட்டையில் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் கருணாநிதியும் பங்கேற்றார். பொதுக் கூட்ட மேடையில் எப்படியோ ஏறிவிட்ட ஒரு இளைஞர், மைக்கைப் பிடித்துப் பேசுகிறார்... "கலைஞர் அவர்கள் முன்பு ஒருமுறை பேசும்போது, 'யாருக்காவது மனநலம் பாதிக்கப்பட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டால் அவர்கள் எலுமிச்சைப் பழத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பைத்தியம் தெளிந்துவிடும்' என்று சொன்னார். அப்படிப் பேசிய கலைஞருக்கே இப்போது பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால்தான் நமது தலைவர் MGRஐ கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார். இந்தப் பைத்தியம் தெளிய ஒரு எலுமிச்சைப் பழம் போதாது. அதனால் ஒரு எலுமிச்சைப் பழ மாலையே போடுகிறேன். இதிலுள்ள அத்துனை எலுமிச்சைப் பழத்தையும் தலைக்குத் தேய்த்துக் குளித்து, பைத்தியம் தெளிந்து, மீண்டும் நமது தலைவர் MGRஐ கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று கடகடவெனப் பேசிவிட்டு அந்த மாலையை கருணாநிதியின் கழுத்தில் போட முயற்சிக்கிறார். அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும்...? உண்மையாகவே சாவடி அடித்தார்கள் அந்த இளைஞரை. இறக்கும் தருவாயிலிருந்த அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ். நல்லவேளைப் பிழைத்துக் கொண்டார் அவர். அந்த இளைஞர் தான் MGR - ஜெயலலிதா ஆகியோரின் அபிமானத்தைப் பெற்றுப் பின்னாளில் சென்னை மேயரான திரு. சைதை துரைசாமி.

Image may contain: 1 person, smiling, closeup
திரு.ஸ்டாலின் அவர்களே, மேற்கண்ட சம்பவம் நடந்தபோது சைதை துரைசாமி உங்கள் கட்சிக்காரர். உங்கள் கட்சியின் பொருளாளர் MGRன் விசுவாசி. அவரையே சாவடி அடித்தது உங்கள் திமுக கும்பல்.
எங்கள் கட்சிக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத, தனது தீய நோக்கங்களுக்காக வேண்டுமென்றே எங்கள் கட்சியின் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுகிற ஒரு நபர், அனுமதி ஏதும் பெறாமல், பைத்தியம் போல செருப்பு மாலை அணிந்துகொண்டு எங்கள் கட்சி அலுவலகத்தில் நுழைந்து அராஜகம் செய்ததைக் கண்டிக்காமல் அவருக்கு வக்காலத்து வாங்கியும் எங்களைக் குறை கூறியும் பேசுவது என்பது உங்கள் மன நலம் பற்றியும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உங்களுக்கும் எலுமிச்சைப் பழம் தேவைப்படுமோ?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...