Wednesday, September 18, 2019

சபையில் பெண்கள் பேசக் கூடாது என்று பைபிள் கூறுகிறது.

இந்து மதத்தில் இந்தியாவில் தமிழகத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது என பலர் கிளம்பி இருக்கின்றார்கள்
எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?
இந்து மதம் பெண்ணை கடவுளாக போற்றியது, யூதமும் இஸ்லாமும் பெண்ணை அடக்கி வைத்த காலத்தில் பெண்ணை சக்திவடிவமாக அதுவும் சிவனில் பாதியாக வைத்து பூஜித்தது
அதை தவிர எந்த மதம் உலகில் பெண்ணை கொண்டாடியது?
இந்திய இலக்கியம் புராணத்தின் உச்சமான ராமாயணத்தில் சீதைக்கு அவளின் கணவனை தேர்ந்தெடுக்க முழு உரிமை வழங்கபட்டிருக்கின்றது
இந்த சுயவரம் என்பது அதுதான், அது வேறு எந்த நாட்டு இலக்கியத்தில் இருந்தது? வாழ்வியலில் இருந்தது?
பாஞ்சாலிக்கு அவள் விரும்பியபடி கணவர்களுடன் வாழ முழு சுதந்திரம் அளிக்கபட்டிருக்கின்றது
நளன் கதை சொல்வதும் அதுவே
பண்டைய இந்தியா பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் அளித்தது என்பதற்கு இவற்றைவிட என்ன சாட்சி வேண்டும்?
நளவெண்பாவில் தமயந்தி அந்த உரிமையினை பெற்றிருக்கின்றாள்
பெரும்பான்மை இலக்கியங்களில் நாயகிகளே பெண்கள்தான், கதை அவர்களை சுற்றித்தான் அமைக்கபட்டிருக்கின்றது
ராமயணத்து பிராதனமே கூனி, கைகேயி, சீதை, சூர்ப்பநகை எனும் பெண்களே
மகாபாரத கதையே பாஞ்சாலி சபதம் என்பதில்தான் வருகின்றது, அவளுக்காக நடந்ததே யுத்தம்
அவளின் கூந்தலை முடியத்தான் மாபெரும் யுத்தம் நடந்தது, அவளுக்கு மதிப்பு அப்படி இருந்திருக்கின்றது
அகநானூறு முழுக்க ஒரு பெண் சுதந்திரமாக பேசும் இலக்கிய செய்திகள் உண்டு, "அப்பன் சொன்னபின்பே கணவனை நோக்குவேன்" எனும் இம்சை எல்லாம் அங்கு இல்லை
"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என முனிவரை மிரட்டிய பெண் இங்குள்ள இலக்கியத்திலேதான் நிற்கின்றாள்
சாவித்திரி எனும் பெண்ணுக்காக கடவுளே இறங்கி வரம் கொடுத்தார் என சத்தியவான் கதையே சொல்கின்றது
இன்னும் ஏராளமான சான்றுகளை சொல்லிகொண்டே செல்லலாம்
இலக்கியத்தை விட்டு அரசியல் என எடுத்தாலும் ருத்ரம்மா தேவி முதல் தஞ்சை குத்தவை தேவிவரை பெரும் அரசியல் பிம்பங்களை காண முடியும்
இந்திய இலக்கியங்கள் எதுவும் பெண்ணடிமைதனம் கொண்டதல்ல, மாறாக அதன் மதமும் இலக்கியமும் பூரண பெண் சுதந்திரம் கொண்டவை
சாகுந்தலா முதல் பல அழியா இலக்கியங்களின் அடிநாதம் அது
பெண்ணாக தாயின் பெருமையினை பாரதம் சொன்ன அளவு இன்னொரு நாட்டு இலக்கியங்கள் எங்கே சொன்னது?
இன்றும் மனைவி அல்லா பெண்ணை அம்மா என்றும் தாயீ என அழைப்பதும் இந்திய பாரம்பரியம், மறுக்க முடியுமா?
பெண்ணடிமைதனம் என்பது மேற்காசியாவில் தொடங்கிய மதங்களிலே இருக்கின்றது, இன்னமும் இருக்கின்றது
அப்படி இருக்க, பெரியார் பெண்ணுரிமையினை நிலைநாட்டினார் என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது
பண்டைய பெண்ணுரிமை எதில் பாதிக்கபட்டது?
இத்தேசம் பல போர்களை கண்டது, பெண்கள் கடுமையாக பாதிக்கபட்டனர்
இத்தேசத்தில் மட்டுமல்ல, அரபு தேசங்கள் யூத இனம் இன்னும் பல இடங்களில் பெண்களை குறிவைத்து நடத்தபட்ட கொடுந்தாக்குதலை குறைத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே கட்டுபாடுகள் வந்தன‌
ஆம் எது மகா முக்கியமோ அதை பாதுகாப்பது மானிட வழக்கம், பெண் என்பவள் சந்ததி கொடுக்கும் மாபெரும் சக்தி அவளின்றி தொடராது சந்ததி என்பதால் பாதுக்காக்கபட்டாள்
அந்த பாதுகாப்பே பின்னாளில் சிறையானது, சீர்திருத்தவாதி குருநாணக் கூட பெண்கள் முக்காடு இடவேண்டும் என்றார்
அது அடிமைதனம் அல்ல, பாதுகாப்பு
18ம் நூற்றாண்டில் தொழில்புரட்சியில் ஐரோப்பாவில் பெண்களும் உழைக்க வேண்டிய கட்டாயம் வந்தபொழுது வேறு வழியின்றி பெண்களும் உழைக்க வந்தனர், வாழ்வியல் நெருக்கடி அது
அந்த நெருக்கடி அங்கு பெண் விடுதலையானது, அந்த வாழ்வில் ஊறிவிட்ட நிவேதிதா போன்றோருக்கு இந்தியா வந்தபொழுது இங்குள்ள தன்மை வித்தியாசமாக பட்டது
பெண்கள் பொதுவாழ்வுக்கு ஏன் வருவதில்லை வந்தால் போராட்டம் சமூகம் பலம்பெறும் என அவளால் பாரதிக்கு போதிக்கபட்டது
பாரதி அதன் பின்பே பெண் விடுதலை பேசினான்
பெரியார் உலகெல்லாம் சுற்றிய அனுபவத்தில் வெளிநாட்டு பெண்களையும் உள்நாட்டு பெண்களின் நிலையினையும் ஒப்பிட முடிந்ததே தவிர அவரின் சொந்த சரக்கு அல்ல‌
காலமாற்றத்தில் எல்லாமும் மாறும்
இதோ சவுதி அரேபிய பெண்களுக்கு சலுகைகள் கிடைக்க தொடங்கியிருக்கின்றன, அங்கெல்லாம் பெரியார் இருந்தாரா? இல்லை சீன சமூகத்து பெண் விடுதலையினை பெரியார் தொடங்கி வைத்தாரா?
பெண்ணை கடவுளாகவும், சக்தியாகவும் , தெய்வமாகவும் கொண்ட நாடு இது
அன்றே சொத்துரிமை, அரசுரிமை, தனக்கான துணைவனை தெர்ந்தெடுக்கும் உரிமை என எல்லாமும் இருந்தது, வழிபடவும் தடை இல்லை, மீரா, ஆண்டாள் அவ்வை என எத்தனையோ பேரை சொல்லமுடியும்
இடையில் வந்த போர்காலங்கள் பாதுகாப்புக்காக பெண்களுக்கு கட்டுபாட்டை விதித்தன, தங்கம் வைரம் போல பெண்ணும் பத்திரமாக பாதுகாக்கபட்டாள்
அதைத்தான் அடிமைத்தனம் ஐயகோ பெரியார் இல்லையென்றால் என கிளம்பிவிட்டார்கள்
வரலாற்றில் பண்டைய இலக்கியங்களில் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கின்றது, அதை படிக்காமல் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பெரியார் புரட்சியாளர் அபூர்வம் என தெரியலாம்
மாபெரும் நீண்ட வரலாற்று நதியில் பெரியார் ஒரு சிறு புல்லுக்கு கூட வரமாட்டார்
இங்கு முதலில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது, கொடிய போர்காலங்கள் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய சில கட்டுபாடுகளை விதித்தன‌
அதுதான் அடிமைதனம் என்றானது
காலம் கொடுத்த அடிமைதனத்தை காலமே உடைத்தது ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...