கவர்னரை சந்தித்துவிட்டு வந்தவுடன் எப்படி ஸ்டாலின் சைலண்டாகப் போராட்டத்தை 'வாபஸ்' வாங்கினார்?
பலரும் காரணத்தை அறிய ஆவல் கொண்டுள்ளனர்..
ஆனால் அதை விளக்கும் கதை அல்ல இது - அத்துடன் இந்தக் கதையை சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள்...
* * *
* * *
ஒரு சர்க்கசில் போட்டி வந்தது. சர்க்கஸ் மேனேஜர் சவால் விட்டார்.
"இதோ, இந்த யானையை ஸ்டூல் மீது முன்னங்கால்களைத் தூக்கியபடி உட்கார வைக்கிறேன் - யாராவது ஒருவர் அதை ஒரே நேரத்தில் 4 கால்களையும் அந்தரத்தில் தூக்க வைக்க வேண்டும்"
"இதோ, இந்த யானையை ஸ்டூல் மீது முன்னங்கால்களைத் தூக்கியபடி உட்கார வைக்கிறேன் - யாராவது ஒருவர் அதை ஒரே நேரத்தில் 4 கால்களையும் அந்தரத்தில் தூக்க வைக்க வேண்டும்"
ஒரு சர்தார்ஜி இரும்புத் தடியுடன் சென்றார். யானையை நான்கு காலையும் தரையில் ஊன்றி நிற்க வைத்தார்.
பிறகு யானையைச் சுற்றி வந்து அதன் பின்பக்கமாக நின்று அதன் விதைப்பையிலேயே இரும்புத் தடியால் பளீரென்று ஓங்கி அடித்தார்.
யானை வலியில் 4 காலையும் தூக்கி, அலறியபடி, அந்தரத்தில் அரை நிமிடம் ஜம்ப் செய்துவிட்டு இறங்கியது.
சர்தார்ஜி சர்க்கஸ் மேனேஜரிடம் பரிசுத் தொகையை வாங்கிச் சென்றார்.
மறுநாளும் ஷோ நடந்தது - சர்தார்ஜியும் வந்தார்.
சர்க்கஸ் மேனேஜர் சவால் விட்டார்:
சர்க்கஸ் மேனேஜர் சவால் விட்டார்:
"யானைகள் எப்போதும் மேலும் கீழும்தான் தலையை ஆட்டும் - இந்த யானையை யாராவது இடம் வலமாகப் பக்கவாட்டில் ஆட்ட வைக்க முடியுமா? ஒரு கண்டிஷன் கையில் ஆயுதம், தடி எதுவும் கொண்டுவரக் கூடாது!"
சர்தார்ஜி யானையை அணுகினார் - கையில் தடி இன்றி - ஆனால் எதையோ மறைத்து வைத்தது போலப் பின் கை கட்டியபடி!
சர்தார்ஜி எப்படி யானையை - எந்த ஆயுதமும் இல்லாமல் - தலையை இடம் வலமாகப் பக்கவாட்டில் ஆட்ட வைக்கப் போகிறார் என அனைவரும் ஆர்வமுடன் இருந்தனர்.
சர்தார்ஜி யானையின் காதருகே சென்று கிசுகிசுத்தார்:
"நேற்று மாதிரி இன்றும் கொட்டையில் ஒரே ஒரு அடி - வாங்கிக்கறியா?"
யானை பலமாக இடதும் - வலதுமாகப் பக்கவாட்டில் தலையை அசைத்தது!
சர்தார்ஜி பரிசை வென்றார்!
No comments:
Post a Comment