Wednesday, September 18, 2019

இறுதலைக் கொள்ளி 🐜 தவிப்பாரோ - கலைஞரின் வாரிசு ?

எடப்பாடி லேசுப்பட்ட ஆளில்லை!
திமுக - இந்தி எதிர்ப்புப் போராட்டம் - அமீத்ஷாவுக்குக் கண்டனப் போராட்டம் என்றவுடன் தமிழக மீடியா அல்லக்கைகள் ஏகத்துக்கும் 'பில்டப்' கொடுத்தன!
'கொதிநிலையை நோக்கித் தமிழகம்'- 'பதற்றத்தின் விளிம்பில் தமிழ்நாடு'- 'பஸ் ஓடுமா? மக்களின் இயல்பு வாழ்க்கை என்னாகும்?'
'ஆறு கோடித் தமிழர்களின் கொந்தளிப்பு'- ' மீண்டும் வெடிக்குமா இந்தி எதிர்ப்பு எரிமலை?'...
போராளிகள், மீடியாக்கள், அல்லக்கைகள் பண்ணிய அலப்பறைக்கு அளவே இல்லை!
அதாவது தமிழகம் போர்க்களமாகும் - மாநிலம் முழுவதும் பதற்றத்தின் பிடியில் இருக்கும் - போராட்டச் சூட்டில் பஸ்கள் எரியும் - பொதுச் சொத்துக்கள் சேதமாகும்...
கவர்னர் உடனே 'மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டதாக அறிக்கை அனுப்புவார் - அரசு கவிழும்'- ... என்று கூட கொக்கு தலையில் வெண்ணை வைப்பது மாதிரி 'ராஜ தந்திர வியூகங்களை' சிலர் மனதுக்குள் போட்டிருக்கக் கூடும்!
கவுண்டரு கண்டுக்கவே இல்லை! அவருடைய 'ஸ்டான்ட்' ரொம்ப சிம்பிள்!
"இத்தனைக்கு அப்புறமும் உன்னைய ஆட விட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தான்னாக்க அசிங்கப் படப் போறவன் அமீத்ஷா"
"இல்லை அவனுக்கு ஆத்திரம் வந்து கோபப்பட்டு CRPF ஐ கொண்டாந்து உன்னய கும்மினான்னாக்க அடிபட்டு சாவப் போறது நீ"
"இதுல நடுவில நான் எதுக்குடா வரணும்? உங்க டீலிங்கை நீங்களே முடிச்சுக்கங்க"-....
சைலண்டா கமுக்கமா நழுவிட்டாரு கவுண்டரு!
உன்னையும், பன்வாரி புரோகிதரையும் கோத்துவிட்டு ஒதுங்கிட்டாரு!
இப்ப நீ 'பேஸ்த்' அடிச்சாப்ல ராஜ்பவனை விட்டு வெளிய வந்து போராட்டத்தையும் வாபஸ் வாங்கினியா...
இதுக்கு அப்பால சிவாஜி கணேசன் தோத்தாரு, அப்படி ஒரு 'ஆக்டு' கொடுக்கப் போறாரு பாரு எங்காளு!
"தனது அரசியல் பயணத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எத்தனையோ நெருக்கடிகளையும், மிரட்டல்களையும் துணிச்சலுடன் சந்தித்து மீண்டவர்!"
"தம்பி (!) ஸ்டாலின் அவர்கள் மிரட்டப்பட்டதாக வரும் செய்திகளை நான் நம்பவில்லை; எனினும் ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ஒரு சிறு மிரட்டலுக்காகப் போராட்டத்தைத் தள்ளி வைக்கும் தம்பி ஸ்டாலின் அவர்கள் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்!"
"ஒரு வேளை அப்படி ஸ்டாலினுக்கு ஏதேனும் நெருக்கடி தரப்பட்டு இருக்குமானால் ஒரு தமிழன் என்ற முறையில் ஸ்டாலின் பக்கம் நின்று , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நட்புக் கரம் நீட்டி, அவருக்கு தார்மீக ஆதரவு தந்து, தமிழன் என்ற உணர்வோடு மத்திய அரசைக் கண்டிக்கத் தயங்க மாட்டோம்!"
இப்ப நீர் என்ன பண்ணுவீர்?
எடப்பாடிக்கு நன்றி தெரிவித்தால் நீங்கள் மிரண்டு போய்தான் வாபஸ் வாங்கியதாக ஆகும்!
நன்றி தெரிவிக்காவிட்டால் நட்புக் கரம் நீட்டி எடப்பாடி வெளிப்படுத்திய 'தமிழுணர்வை' நீங்கள் அலட்சியப்படுத்தியதாக ஆகும்!
'செக்' வைக்கப் போறாரு பாரு எடப்பாடி! எங்க ஊர் கவுண்டரு லேசுப்பட்ட ஆளில்லை!
'இல்லை இல்லை... எங்களை பன்வாரி புரோகிதர் மிரட்டல்லாம் இல்லை'- அப்படினு 10 வாட்டி உன் வாயாலாயே சொல்ல வைப்பாரு எடப்பாடி!
இவர் பந்தைப் பாஸ் பண்ணி விட்ட உடன் BJP காரன் கோல் போடுவான்!
'நாங்கள் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தும் எந்த எதிர்க் கட்சிகளையும் மிரட்ட மாட்டோம்'...!
அம்புடுதான் மேட்டரு!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...