Wednesday, September 4, 2019

ஒரே நேரத்தில் வழக்கு விசாரணை வந்தால் வக்கீல் எந்த பக்கம் வாதம்.


சக பயணியொருவர் சொன்னதன் சாராம்சம். இப்படியெல்லாமா நடக்கும்?:: ....விரைவில் எதிர்பாருங்கள்:::
75 வயசாச்சுன்னா, நம்ம ஜட்ஜை நாமளே தேர்ந்தெடுக்கலாம்.
76 வயசாச்சுன்னா, நம்ம தண்டனையை நாமளே தேர்ந்தெடுக்கலாம்.
பை தி வே, மல்லையாவின் வயது என்ன? அவர் லண்டன் ஜெயிலையே, இந்திய கோர்ட்களில், விசாரணை முடியும் வரையில், தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா?
.
.
கீழ்க்கண்ட செய்தி உண்மையென்றால், மேற்கண்ட செய்தியும் உண்மையாகும் காலம் வரக்கூடாதா, என்ன?
நீதித்துறையில் புரட்சி! ஊழல் பசியின் சொல்லை ஏற்று, கோர்ட் ஆர்டர்!
ஹையா! 74 வயசாச்சுன்னா, நம்ம ஜெயிலை நாமளே தேர்ந்தெடுக்கலாம்.
.
.
அண்ணல் ராம்ஜி அம்பேத்கர், இன்று உயிரோடிருந்தால், நீதித்துறை குறித்த பெருமிதத்தில், மூச்சுத் திணறி, அகாலமாய் மரித்திருப்பார்.
.
.
“பசியின் மீது எவரும் கைவைக்க முடியாது; அவருடைய கரங்கள் ஆக்டோபஸ் போன்று பரந்து, விரிந்து, பரவியுள்ளன. அவர் மனதில் நினைப்பது, கட்டளையாக உருவெடுக்கும் வல்லமை கொண்டது.”, என்றெல்லாம், சிலர் சொல்லும்போது, …. “நம் நீதித்துறையை அறியாதவர்கள் ஜம்பமடிக்கிறார்கள்”, என்று நினத்தனர் பலர்.
“ஊழல் பசியை, ஊழல் பசியின் வல்லமையை அறியாத மூடர்கள், அந்த பலர்”, என்று, அவர்களுக்கு, இப்போது புரிந்திருக்கும்.
.
.
நீதியை கரைத்துக் குடித்து, ஜீரணித்து, ஏப்பம் விட்ட ஊழல் பசியால்தான், இப்படியெல்லாம், புரட்சிகரமான, மிக நியாயமான தீர்ப்புகளை வாங்க முடியும்.
நீதித்துறைக்கே பாடமெடுத்து, புதுமையான தீர்ப்புக்களை வாங்கும் பசியின் வல்லமையும், மகிமையும், சரித்திரத்தில், என்றென்றும், நிலைத்து நிற்கும்.
ஊழல் பசியின் திறமையும், சுப்ரீம் கோர்ட்டின் நீதியும், உலகமெங்கும் பாராட்டைப் பெறத் தக்கவை. முன்னுதாரணமாக வரிக்கத் தக்கவை. இந்தியன் உலகப் புகழ் பெறுகிறான்.
பை தி வே, மல்லையாவின் வயது என்ன? அவர் லண்டன் ஜெயிலையே, இந்திய கோர்ட்களில், விசாரணை முடியும் வரையில், தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா?
.
.
பி.கு::
1) பினாமி மூலம் குற்றம் செய்வதில், மேலுமொரு கோணம் சேர்க்கப்படலாம்; ஊழல் பசி கேஸை உற்றுக் கவனித்து வரவும்:::
குற்றம் செய்பவனும், பினாமியும் 70 வயதை நெருங்கியவனாக இருந்தால் தப்பித்து விடலம். மூன்று வருட முன் ஜாமின், மூன்று வருட விசாரணை முடிவில், 76 வயதாகும் போது, அவனுக்கான தண்டனையை, அவனே எழுதிக் கொள்ளலாம், எனும் வசதி வந்து விடலாம்.; பசி தயவில், அது நடக்கலாம். .
2) டெல்லி ஹை கோர்ட் மேற்கோள் காட்டிய ஜகன் மோஹன் கேஸில், இதுபோல சுப்ரீம் கோர்ட் நீதி பரிபாலனம் செய்ததாகத் தெரியவில்லை; ஜகனின் வயது 74 ஆகவில்லை, என்பதுதான் காரணமோ? ஐயோ பாவம், கனிமொழி, ஏ,ராஜா.. 74 வயது வரை காத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டார்களோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...