சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனா ல் மீண்டும் சோப்போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொ றுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்து கின்றனர்.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிரா ண்ட்களில் சோப்கள் கிடை க்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட்கள் பிரபல மானவை. மீத முள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் பிரபலமாக இரு க்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது. போட்டி அதிக ம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கி யம். அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போது தான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங் குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல்தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள் முதல் மற்றும் விற்பனையை கணவர் பார்த்து கொள்கிறார். நிர் வாகத்தை நான் பார்த்து கொள்கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத்தோம். இத னால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துல க்கும் சோப், பவுடர் ஆகியவையும் தயாரித்து விற்கிறோம். புதி தாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால் தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோ பால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால் சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன் றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்ப னைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
கட்டமைப்பு:
2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம், 10 கேன் ரூ.2 ஆயிரம், இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு):
ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற் பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.
வருவாய்:
ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்கா கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
தேவையான பொருட்கள்:
சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்), எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).
கிடைக்கும் இடங்கள் :
சோடா – கோவை, சிலரி ஆயில் – புதுவை, டினோபால் பவுடர் – மும்பை, க்ளே – கேரளா, கால்சைட் – சேலம், சிலிகேட் – கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் – கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற் கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத் தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.
சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்க லாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறு படும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரி க்கலாம்.
No comments:
Post a Comment