சபரிமலையில் விமான நிலையம் அமைக்க என்று சொல்லி மலையாளி ஆனா கிருஸ்துவ பாதிரி ஆபிரகாம் அமெரிக்காவில் பண வசூல். ஏர்போர்ட் கட்டி சுற்றுலா மையமாக்கி சபரிமலையின் புனிதத்தை கெடுப்போம் என்று பிரச்சாரம் செய்து பணம் வசூல் செய்கிறது இந்த கிருஸ்தவ லாபி.
அமெரிக்காவில் உள்ள கிருஸ்த்தவ மலையாளிகளிடம் தவறான செய்திகள் சொல்லி பணம் வசூல் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் அரசின் சில கமிட்டிக்களில் நான் உறுப்பினராக உள்ளேன் என்று இந்த பாதிரி தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார்.
அய்யனின் புண்ணிய பூங்காவனத்தையும் ஹிந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையையும் அழித்து சபரிமலையில் இருந்து ஆதாயம் கிடைக்க இந்த கிருஸ்தவ லாபிகளும் , கம்யூனிஸ்ட் அரசும் முழுவீச்சில் செயல்படுகிறது.
சபரிமலை விமான நிலையத்தை சார்ந்து உண்டாகும் தொழில்கள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் விரிவாக வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் இந்த பாதிரி பேசியுள்ளர். இந்த பாதிரியின் பேச்சு அமெரிக்கா வாழ் ஹிந்துக்கள் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மாநில அரசு சபரிமலையில் விமான நிலையத்துக்கு ஆய்வு கூட செய்யாத நிலையில் வெளிநாடுகளில் இது போல் பிரச்சாரம் செய்வது கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவோடு தான் என்பது உறுதியாகிறது.
விமான நிலையம், ரோப் கார் போன்றவை அமைத்து சபரிமலையை சுற்றுலாதளம் ஆக்கி வியாபார ரீதியாக வருமானம் பார்ப்பது நமது திட்டம் என்று அமெரிக்கா வாழ் கிருஸ்துவ மலையாளிகளிடம் இந்த பாதிரி பேசியுள்ளார். சபரிமலையை சுற்றுலா தளமாக்கி அதன் மூலம் கோடிகளில் வருமானம் பார்க்க என்னும் கிருஸ்தவ லாபி மற்றும் கம்யூனிஸ்ட் அரசின் திட்டத்தின் ஒரு பாகம் தான் சபரிமலைக்கு இளம் பெண்களை கொண்டு சென்றது. வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியின் கீழ் வரும் சபரிமலை வனப்பகுதியையும் அழிப்பதே இவர்கள் திட்டம்.
No comments:
Post a Comment