Wednesday, October 2, 2019

முகமூடி அணிந்து நகைக்கடையில் சாவகாசமாக கொள்ளையடித்த நபர்கள்- சிசிடிவி புகைப்படம் வெளியானது.

முகமூடி அணிந்து நகைக்கடையில் சாவகாசமாக கொள்ளையடித்த நபர்கள்- சிசிடிவி புகைப்படம் வெளியானது
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள்


















திருச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மொத்தம் 100 கிலோ எடையுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொள்ளையர்களால் நகைக்கடையில் துளையிடப்பட்ட சுவர்

தகவல் அறிந்த போலீசார் நகைக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, இரண்டு நபர்கள் குழந்தைகள் அணியும் விலங்குகளின் முகசாயல் கொண்ட முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிந்துகொண்டு கடைக்குள் நகைகளை கொள்ளையடிப்பது தெரியவந்தது. இந்த சிசிடிவி புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

கொள்ளையர்கள் மிகவும் சாவகாசமாக நடந்து சென்று கொள்ளையடிப்பதை பார்க்கையில், கடையைப் பற்றி நன்கு தெரிந்த நபர்களே இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...