Ø ஊழல் சரித்திரத்தின் பேரனே உதயநிதியே மோதி மீண்டும் பிரதமராகி விட்டார் .. தமிழ்நாட்டிற்கு இரண்டு முறை வந்து போனார். ஒளிந்து கொண்டு தமிழகம் வருகிறார் .
Ø வேஷ்டி சட்டையில் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒளிந்து கொள்கிறார் ..
Ø மறுநாள் கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில் குப்பைகளை பொறுக்குகிறார் என்று சொன்ன திருட்டு திமுக தலைவனின் பேரனே
தில்லுமுல்லுகள் செய்து பொதுப்பணித்துறை அமைச்சராகி அண்ணா முதலமைச்சராக இருந்த போது கூவத்தை சுத்தம் செய்வதாக சொல்லி
அதற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்த உங்க தாத்தாவே வெட்கப்படாமல் முதலை கூவத்தில் உள்ளதாக கதை கட்டி கூவத்தை சுத்தம் செய்ய இயலவில்லை என்று டபாய்த்தார்.
பிரதமர் நடைப்பயிற்சி செய்த இடத்தில் இருந்த குப்பைகளை தன் கையாலேயே பொறுக்கி சுத்தமாக்கியது பொறுக்கிகள் கட்சிகளுக்கு உறுத்துகிறதா ??? சர்க்காரியா கமிஷன் வழக்கில் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது . சாக்குகளை எலிகள் கொறித்து தின்று விட்டது என்று புழுகி நீதிபதியையே திணறடித்த உங்க தாத்தாவே ஊழல்களை மறைத்து நாடகமாடி மக்களிடம் ஓட்டு கேட்டு தமிழகத்தின் முதல்வரான போதும் வெட்கப்பட்டு ஒளியவில்லை அப்படிப்பட்ட திராவிடக் கள்ளர்களே அச்சப்படாமல் மான ரோஷமின்றி மனசாட்சியிமின்றி தமிழகத்தை ஆண்ட போது ஊழலற்ற பிரதமர் எதற்காக ஒளிந்து தமிழகம் வரவேண்டும் ??
இப்படி விஞ்ஞான ஊழல்களை செய்த உங்க தாத்தாவை ஐந்து முறை முதல்வராக்கிய திமுகவிற்கு ஓட்டுபோட்ட மக்களுக்கும் வெட்கமில்லை . இன்னும் அம்மக்களும் திருந்தவில்லை. நேர்மையாக எதையும் துணிகரமாகச் செய்யும் பிரதமர் மோதி ஜி எதற்காகடா தமிழகத்திற்கு வரும்போது ஓடி ஒளிய வேண்டும் ??? ஊழல் சொத்தில் உடம்பு வளர்த்த நீயே ஓடி ஒளியாமல் தெனாவெட்டாகத் திரிகிறாய்.. அவர் எதற்காக ஒளிந்து வரவேண்டும் ??
தமிழகத்தில் ஒரு பெண்ணை அரசியலால் வீழ்த்த முடியாத திமுக கோழைகள் பேடிகள் இந்தியாவையே கட்டி ஆளும் பிரதமரை பார்த்து ஓடி ஒளிந்து கொண்டார் என்றும் வேட்டி கட்டி மாறுவேடத்தில் வருகிறார் என்றும் கதை பேச வெட்க மானமில்லையா ??? உன் தாத்தா தான் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை காப்பாற்ற வக்கின்றி டெல்லியை எதிர்க்க துணிவின்றி உண்ணாவிரத நாடகமாடி ஒளிந்து கொண்டார் . வெளியே வீராப்பு உள்ளே கூழைக் கும்பிடுனு நீங்க டெல்லி தலைமைக்கு கும்பிடு போட்டு வருகிறீர்களே தெரியாதா மக்களுக்கு ???
உன் அப்பன் முதல்வர் கனவிலும் அடுத்த வாரிசாக நீ முதல்வர் கனவிலும் சட்டையை கிழித்து நாடகமாடி சாகசங்களை செய்யும் நீங்கள் ஓடி ஒளியுங்கள். உப்பு போட்டு சோறும் தின்னும் மானமுள்ள இந்துக்களாகிய தமிழர்கள் யாருமே உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் இந்தப் பாவத்தை செய்ய ஒருகாலும் துணியமாட்டார்கள் .
இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் செய்யத் துணியாத காஷ்மீர் சிறப்பு சட்டம் 370யை நீக்கிய இந்தியாவின் கம்பீரமான ஆண்மகனை பார்த்தா ஓடி ஒளிகிறார் என்கிறாய் ??? கேடிக் குடும்பத்தில் பிறந்த நீங்களெல்லாம் தெனாவெட்டாகத் திரியும் போது ஒழுக்கத்தையே உயிராக கொண்ட ஒரு நல்ல மனிதர் எதற்காக ஓளிந்து தமிழகம் வரவேண்டும் ??? உன் குடும்பம் ஊழல்களால் தமிழகத்தை ஆண்டது . ஊழலற்ற ஆட்சியை தந்த முதல்வராக பிரதமராக வலம் வரும் மோதி ஜி ஏன் ஒளிந்து தமிழகம் வர வேண்டும் ??
உங்கள் திருட்டுத்தனம் அவரை கோபேக் சொல்ல போராடினால் அவர் பயந்து ஓட கோழையென்றா நினைத்தாய் ?? உலகத்தையே தன் வசமாக்கிய உலகத்தலைவர் அவர் ! மழைக்கு முளைத்த விஷக் காளான்கள் நீங்கள் அந்த குறிஞ்சி மலரை பார்த்து ஒளிந்து கொண்டு வருகிறார் என்று கதைக்கிறீர்களா நாதாறிகளே ???
தேசத்தின் பிதாமகனை பார்த்து மாறுவேடத்தில் வருகிறார் என்றா ஊழல் வம்சத்தின் வாரிசு நீ தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறாய் ??
இங்கே பார் !
உங்கள் கட்சியைப் போல் பொய் வாக்குறுதிகளை தந்து மூன்றுமுறை முதல்வராகவும் இரண்டுமுறை பிரதமராகவும் அவர் நாடாளவில்லை .. சாராய கடைகளை குத்தகைக்கு விட்டு தொண்டர்களின் குடும்பங்களில் தாலி அறுத்து பாவங்களில் அவர் அரசாளவில்லை .. உங்களை மாதிரி மணற்க் கொள்ளைகளுக்கு பினாமிகளை வைத்து குடம் இங்கே தண்ணீர் எங்கே னு ட்ராமா போட்டு நாடகமாடவில்லை ... ஓட்டிற்காக நோட்டு கொடுத்து இலவசங்களை அறிவித்து அவர் முதல்வராகவோ பிரதமராகவோ கோலோச்ச
துணியவில்லை . அடி முட்டாளே நேர்மையின் பிறப்பிடமடா அவர். ஊழலற்ற ஆட்சியை தான் தரவேண்டும் என்று வாழும் நீதியின் உருவமடா அவர் !
போடா புண்ணாக்கு .. உங்களின் வண்டவாளங்களுக்கு நீங்களே வெட்கப்படாமல் ஓடி ஒளியாமல் திரிகிறீர்கள் .. அவர் முகத்தில் முழிக்க வெட்கப்பட்டு தானே கோபேக் சொன்னீர்கள் ...
உத்தமர் அவர் எதற்காக ஒளிந்து தமிழகம் வர வேண்டும் ?? நீங்கள் ஊழல்களால் திருடிய சொத்தை அரசு உடைமையாக்க சட்டரீதியாக அவர் நேர்மையுடன் துணிவாக தமிழகம் வந்தார் வருவார் .. எதிர் கொள்ள தயாராக இருங்கள் ....
No comments:
Post a Comment