Wednesday, July 8, 2020

ஊடக_நரிகள் - ஒரு பார்வை !

மாரிதாஸ் சரியாகத்தான் சொல்கிறார்.
இந்த நரிகள் எப்படி ஊடுருவி உள்ளிருந்தே உங்களை மாயக்கும் என்று அறிக.
இந்த குணசேகரன் கதையை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இவர் தொழிலை தொடங்கியது "தி ஹிந்து" பத்திரிக்கையில். பின் வளர்ந்தது "டைம்ஸ் ஆஃப் இந்தியா".
தொலைகாட்சியில் இவர் "புதிய தலைமுறை"யில் நுழைகிறார். பின் "நியூஸ்18" ல் தலைமை நிருபர்.
இந்த வளர்ச்சியில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனியுங்கள். இவர் எங்கெல்லாம் சென்று வளர்கிறாரோ அங்கெல்லாம் இந்து விரோத போக்கும், தேச விரோத எண்ணங்களும் வளர்கின்றன.
இவரது மாமனார் திக வின் இரண்டாவது தலை !
மொத்தமும் விஷம். "திராவிட நாஜி" தத்துவ வியாதி. இவர் நினைத்திருந்தால் தன் மருமகனை வழக்கப்படி தன் ஆண்டைகளின் ஊடகமான "சன்" தொலை காட்சியிலோ "கொலைஞர்" தொலைக்காட்சியிலோ புகுத்தியிருக்கலாம்.
ஆனால் அதை செய்யவில்லை. (இரணடுத்திலும் சம்பளம் கட்டை என்பது வேறு விஷயம்)
வடநாட்டு டிவி ஓரளவு நடுநிலை என்று மக்கள் நினைக்கும் "நியூஸ் 18" நுழைய வைக்கிறார். அப்போதுதானே இவர் கட்சி சார்ந்தவரில்லை. இவர் சொல்வதெல்லாம் நடுநிலைமை என்று பொதுமக்களை முட்டாள் ஆக்க முடியும். மேலும் இந்த தற்குறி கூட்டத்திற்கு தேசிய ஊடகவியலர் கூட்டதில் ஒரு சீட் கிடைக்கும்.
திட்டம் சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது.
மும்பையில் இருக்கும் வியாபாரிக்கு தமிழ் தெரியாமல் போனாலும் காசு வருதா பாரு என்று இருந்து விட்டார்கள். இங்கே "திராவிட நாஜி"க்கள்
தங்கள் வழக்கப்படி மெல்ல விஷத்தை ஏற்றி தமிழக மக்களின் மனதை கெடுக்கும் வேலையை திறம்பட செய்கிறார்கள்.
இவர் எத்தனை நடுநிலை என்றால் இவர் முகநூல் பக்கத்தில் தான் ஏற்கனவே வேலை செய்த இடங்களை குறிப்பிடும் போது "புதிய தலைமுறை" யை வசதியாக விட்டு விட்டார். (படம் காண்க!) காரணம் அண்ணன் பாரி வேந்தர் தனியா போட்டி கட்சி கடை போட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தான்.
அடப்பாவிகளா! இவ்வளவுதானா உங்க நேர்மை !
பாரி வேந்தரிடம் வேலை செய்யும் போது சம்பளம் கொடுக்கப் படவில்லையா?
நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல 80களின் கடைசியிலும் 90 களில் தொடங்கி தீவிர தமிழ் தேசிய கூட்டம் இந்தியாவில் வந்திறங்கி கருத்தியல் மாற்றம் செய்ய குறி வைத்த இரண்டு ஊடகங்கள்.
ஒன்று - ஆனந்த விகடன். இன்னொன்று - "தி ஹிந்து".
காரணம் அன்று இவை இரண்டும் பெருமளவு சத்தியத்திற்கு கட்டுப் பட்டு செயல்படும் இடமாக இருந்தன.
பின்பு இந்த பிரிவினை கூட்டம் உள்ளே புகுந்து அவர்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்று விட்டனர் என்றே சொல்லலாம். (அப்போதுதான் மாணவர் நிருபர் திட்டம் தொடங்கப் பட்டது என்று அறிக!)
பின் இவர்களுடன் இணைந்து "உனக்கு நான் ஊட்டுகிறேன்! எனக்கு நீ ஊட்டு" என்று கம்மிக்கள் திக, திமுக, கிறிஸ்துவ ஜிகாதி கூட்டங்கள் தங்கள் செயல்பாடுகளை லயோலா, தொலை காட்சிகள் என்று பரவலானது. 90க்கு முன்பு வரை லயோலாக்கள் வெறும் மதமாற்ற அஜெண்டாவுடன் நிறுத்திக் கொண்டது.
இந்த ஊடுருவல்கள் ஏன்?
இந்த "திராவிட நாஜி" களாலோ, அல்லது மதமாற்றி ஜிகாதிகளாலோ தம் உண்மையான பெயரில் உண்மையான கருத்துக்களை முன் வைத்து வளரவே முடியாது என்று தெரியும்.
தீக்கதிர், விடுதலை, முரசொலி, நமது எம். ஜி. ஆர் ஏசு அழைக்கிறார் போன்ற ஊடகங்கள் அந்த கூட்டத்திலேயே பலராலும் படிக்கப் படுவதில்லை.
கொலைஞர் தொலைகாட்சியில் "மானாட மயிலாட" விட்டும் வேலைக்கு ஆகவில்லை. ஆகச் சிறந்த அல்லக்கை சுப.வீ. யும் ஸ்டாலின் வீட்டு வாசலில் கையேந்திதான் நிற்கிறார். அவரால் கூட ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தை அமைக்க முடியவில்லை.
காசு இல்லாமல் இல்லை. அது நிறைய உண்டு.
பின் ஏன் என்றால் இவர்களின் பொது ஊடக அறிவு அவ்வளவுதான்.
ஊடகம், வியாபாரம், சினிமா, பொது சேவை என்று எல்லா இடத்திலும் பேர் ஒன்றும் செயல் ஒன்றுமாக ஊடுருவம் கூட்டத்தின் படித்த மூஞ்சி தான் இந்த குணா எனும் குணசேகரன்.
இவர்கள் கொள்கைகள் ஒரு சப் ஜெயிலில் அடைக்கப்படும் சிறு கூட்டத்திற்கு மட்டும் தான் சொந்தம். (சீமான் எத்தனை கத்தியும் ஒரு தொகுதிக்கு 5000 ஓட்டு கூட கிடைக்கவில்லை என்று அறிக)
அதிலும் இவர்கள் தனித்தனியாக பிரிந்தால் அதுவுமில்லை. இப்போது இவர்கள் ஒருங்கிணைந்திருப்பதின் ஒற்றை நோக்கம் இந்துக்களை குழப்பி பிரித்து அவர்களின் அடையாளங்களை அழித்தொழிக்க வேண்டும்.
அப்புறம் தமக்குள் யார் பெரிய ஆள் என்று தீர்மானிக்கலாம் என்பதே !
இந்த அறிவு நம் இந்துக்களிடையே இல்லையே !
இப்போது கூட பள்ளர்கள் வேளாண் தொழில் செய்தாலும் தங்களை வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு கூட்டம் உறுமி நிற்கிறது. இதுதான் நம் பலவீனம்.
இந்த குணாவோ, அவரது புழுக்கைகளான கார்த்திகை செல்வனோ, நெல்சனோ இப்போது புதிதாக பினாமியாக யு. டியூபில் கிளம்பி வரும் விக்கிரமன், அக்கிரமண் போன்ற யாராக இருந்தாலும் பாண்டே, மாரிதாஸ் போன்றவர்களின் கால் தூசுக்கு கூட வரமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் சத்தியத்தின் பக்கம் இருக்கிறார்கள்.
இன்று ஊடகத்தில் உலவும் பாம்பு குட்டிகள் பிறக்கும் இடம் பெரும்பாலும் லயோலா. வளரும் இடங்கள் விகடன், ஹிந்து போன்ற இடங்கள். இது ஒரு விஷச் சூழல்.
இது போன்ற ஊடக ஓநாய்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டும் நேரம் வந்துவிட்டது.
சத்தியமே வதே ஜெயதே ! வாய்மையே வெல்லும்.
#clean_the_new18TN
07/07/2020.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...