தமிழ் சினிமாவின் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த ஈரோடு சவுந்தர் இன்று காலமானார்.
முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கியவர் ஈரோடு சவுந்தர். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும், சிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது பெற்றவர். ரஜினியுடன் லிங்கா, கமலுடன் தசாவதாரம் ஆகிய படங்களில் ஈரோடு சவுந்தர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஈரோடு சவுந்தர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு சவுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
63 வயதாகும் ஈரோடு சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்ரி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரோடு சவுந்தரின் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment