Friday, December 4, 2020

உடனே செய்ய வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள்.

 1) எலக்சனுக்கு முன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடக்கூடாது?

2) எலக்சனுக்கு பிறகு மெஜாரிட்டி இடங்களை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கலாம்.
3) மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அனுமதி தரலாம்.
4) 5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகளை பெறும் அனைத்து கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.
5) ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் நிற்க தடை.
6) இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்க தடை.
7) தேர்தல் அறிக்கையில் எந்தவித இலவச அறிவிப்பும் மக்களுக்கு அறிவிக்ககூடாது.
8) இடைத்தேர்தல்கள் நடத்தக்கூடாது. இறந்த MLA தொகுதி கலெக்டரால் கவனிக்க படவேண்டும்.
9) எம்எல்ஏ வாக இருப்பவர் எம்பி எலெக்சனில் போட்டியிட கூடாது.
10) போட்டியிடும் தொகுதியில் ஆதார் அட்டை உடையவர்கள் மட்டுமே அங்கே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
11) ஓட்டுரிமை படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தர கூடாது. அல்லது 22வயது வரை ஓட்டுரிமை கிடையாது என்ற நிலை வேண்டும்.
12) அனைத்து MLA மற்றும் MP
களின் உதவியாளராக அனைவருக்கும் ஓரு தனித்தனி IAS அதிகாரிகள் நியமிக்கபட வேண்டும்.
13) தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தபட வேண்டும். மேம்பாட்டு திட்ட அறிக்கை கொடுத்தால் மத்திய PWD அந்த திட்டத்தை நிறைவேற்றி கொடுக்கும் என மாற்ற வேண்டும்.
14) ஓரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். .
15) ஓட்டு பதிவுகள் online முறையிலும்/ அனைவருக்கும் தபால் ஓட்டு போட வழி வகை செய்து நடத்தி 90% ஓட்டு பதிவை உறுதி செய்ய வேண்டும்.
இவை நடந்தால் மட்டுமே மாற்றமும் நல்ல முன்னேற்றமும் நாட்டில் ஏற்பட்டு மக்களும் சிறப்பாக வாழ முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...