Saturday, December 5, 2020

இலந்தை மர இலையின் மருத்துவ பயன்கள்:

 ◆இலந்தை இலையை மை போல் அரைத்து, பூசி வந்தால், தலையில் ஏற்படும் புழுவெட்டு நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து, அதனை உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசி வந்தால், அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

◆இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன், 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து, மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.இப்படி செய்து வந்தால், கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கி, வலி குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.
◆இளநரையைப் போக்கும் தன்மை, இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி, 10 நிமிடங்கள் வரை ஊற விட்டு அலசினால், இளநரை மாறும். மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், மூளை புத்துணர்வு பெறும்.
◆ஒரு கைப்பிடி இலந்தம் பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து, படுப்பதற்கு முன், அருந்தி வந்தால், மூளை புத்துணர்ச்சி பெறும். பற்கூச்சம், ரத்தக்கசிவுக்கு இலந்தையை மென்று தின்னலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...