என்று உரத்த குரலில் இவர் உதிர்த்த மந்திர வார்த்தை இன்று மண்ணுக்குள்
பொலிவிழந்து உணர்வற்றுக் கிடக்கிறது ..!!
#இறப்பு இந்த இமயமலையைச் சரிக்க 75 நாட்கள் ஆனது… நான் பிறந்த நாள் முதல் ... முதல்வர் யார்? என்றால்…
எங்கள் அம்மா உங்கள் பெயர்
ஜெ.ஜெயலலிதா என்ற ஆளுமைப் பெயர்தான் என் மனக்கண் முன் நிற்கும் ..!!
#ஆயிரம் ஆட்கள் உங்களை அடுக்கடுக்காய் குறை கூறினாலும்
அடித்தட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றிய பணிக்கு என் அறையில் இருக்கும்
செங்கற்களும் , உங்கள் இலவச மடிக்கணினியும், மின்சாரமும்
சான்று அம்மா…!!
#என்றுமே நீங்கள் தனி முத்திரை
பதித்த தங்கத் தாரகை..!!
உங்களின் செவிகள் கேட்க முடியா
தூரம் இருந்தாலும் என்றும்… உங்களுக்கென்று சிறப்பிடம் உண்டு….
மக்கள் எங்கள் மனதில் #தாயே….!!
#சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்...
தந்தையின்றி பால்யம் தொலைத்தவர்...
தாய்க்காக கனவுகளைத் துறந்தவர்...
#மக்கள் திலகத்தால் திலகமிடப்பட்டவர்...
திராவிடக் கொள்கை பரப்பிய பாப்பாத்தி அவர்...
சேவலை வைத்து இரட்டைப் புறாக்களை வீழ்த்தியவர்...
#இளமையின் நேர்மையோடு ஆளத் துவங்கியவர்...
இரத்த வழியற்ற உறவுகளாலும் அதன் தேவைகளாலும் தீராப் பழி சுமந்தவர்...
தோல்வியின் வலியையும் துரோகத்தின் கோர முகத்தையும் உச்சி முகர்ந்தவர்...
#தான் இறக்கும்வரை எதிரிகளை பரம வைரிகளாகவே தூரம் நிருத்தியவர்...
நீர் பங்கீட்டிலும் விநியோகத்திலும் சேமிப்பிலும் தீர்க்கம் கொண்டவர்...
காற்றை விற்றவர்களை பறக்கடித்தவர்...
#சரித்திரம் காணாத மக்களாட்சி தந்தவர்...
எந்த கேடிக்கும் அஞ்சாத லேடி அவர்...
பெயர் போலவே வாழ்ந்தவர் அவர்...
#நரித்தந்திரங்களை எதிர்த்து ஆண்டவர்...
நூறாயிரத்தாண்டு பேசும் வாழ்வை அகவை 68 ல் முடிக்கவைக்கப்பட்டடவர்...
“#தமிழக மக்களின் உளப்பூர்வ மகிழ்ச்சி தான் எனது வாழ்நாள் லட்சியம்...
#தமிழக மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்...
#உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஒவ்வொரு நாளும் ஆத்மார்த்தமாக உணர்கிறேன்...
#உங்களையெல்லாம் கண்ணிமைக்குள் வைத்துக் காத்திட இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக, தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்கிறேன்...”
""""#எனக்கென்று_யாரும்_கிடையாது""""
"""""#எனக்கு_எல்லாமே_நீங்கள்தான்""""'
#ஜெ_ஜெயலலிதா தமிழக முதல்வர்
#இனி இம்மண்ணை ஆளக் கிடைக்கவே இயலாத அதிஅற்புத அழகோவியம் மாண்புமிகு #இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் மக்கள் பார்வையிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்ட #1579_ம் நினைவுநாள்...
#கண்ணீர் ஒன்றைத்தான் இந்த ஏழைத் தொண்டனால் தற்போதைய சூழ்நிலையில் தரமுடியும் ஆருயிர் அன்னையே!!... அன்னை பராசக்தியே!!...
#சுதந்திரக்காற்று எங்களை தவிக்க விட்டுப்போய் இன்றோடு #1579_முழுநாட்கள் கடந்து விட்ட நிலையில் உங்கள் இறப்பின் மர்மம் அறியா நடைபிணங்களாய் உங்கள் பிள்ளைகள் நாங்கள்...
No comments:
Post a Comment