@@@ இன்று 'மக்கள் திலகம்', 'பொன்மனச் செம்மல்' 'எட்டாவது வள்ளல்' எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த தினம்.
முதலமைச்சருக்காக அரசு ஒதுக்கிய காரைப் பயன்படுத்தாமல், தன் சொந்த, பச்சை ரதமாகிய இந்த '4777' என்ற எண் கொண்ட அம்பாஸிடர் காரையே பயன் படுத்தினார்.
1977 பொதுத்தேர்தலில் அதிமுக வென்று, முதல்வராக மக்கள் திலகம் பதவியேற்ற நாள் 4-7-77. அதுவே அவரது காரின் எண்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!!!" என்ற நிலைத்த புகழுக்கு சொந்தக்காரர்.
1967இல் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், 1984ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோதும் பிரச்சாரத்துக்கு வராமல் படுத்துக் கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
'மனித நேயரே'... இவ்வுலகம் உள்ளவரை உன் புகழும் நிலைத்திருக்கும். @@@
No comments:
Post a Comment