மத்திய அரசை நிர்பந்தித்து மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் வழக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் கருணாநிதி...
தன்னுடைய அரசை இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்தபோது ஜனநாயக படுகொலை என்று குமுறிய பசுத்தோல் போர்த்திய ஓநாய்...
எஎமர்ஜென்சி காலத்தில் மகன் ஸ்டாலினை கைது செய்து சிறையில் சித்திரவதை செய்த இந்திராவோடு பதவிக்காகக் கைக்கோர்த்து
"நேருவின் மகளே வருக,
நிலையான ஆட்சித் தருக"
என்று ஆலவட்டமும் சுற்றி பிறகு இந்திராவை நிர்பந்தித்து எம்ஜியாரின் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார் கருணாநிதி...
ஆதி பாவம்.
2006-11 கருணாநிதியின் ஆட்சி அவலமானது.
ஒரு தேர்தலை ஜெயிப்பதற்காக ஒரு சமூகத்தையே இலவசங்களுக்கு அடிமையாக்கியதில் இருந்து அவர் அடுக்கடுக்காகச் செய்தவை என்னை திமுக மீது தீரா வன்மம் கொள்ளச் செய்தது...
இந்திய அரசியலில் இலவசங்கள் தவிர்க்க இயலாதவை அது தமிழகத்திற்கும் பொருந்தும்..
இலவச வேட்டி, சேலை, காலணி முதல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு என்று ஒரு நீண்டப் பட்டியல் தமிழகத்தில் இலவசத் திட்டங்களாக இருந்து வந்தன...
அவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளை ஏழைகளுக்குப் பூர்த்திச் செய்வனவாக இருந்தன, அல்லது அது தான் குறிக்கோள் என்றாவது சொல்லப் பட்டது.
கருத்துக் கணிப்புகளில் திமுகப் பின் தங்குகிறது என்பதை அறிந்து தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது என்று தத்தளித்த திமுகவுக் கைக் கொடுத்தார் பொருளாதாரம் படித்தவர் என்று சொல்லப்பட்ட நாகநாதன் என்பவர்...
தமிழர்களின் சினிமா மோகம் உலகறிந்தது.
அந்தச் சினிமா மோகத்தை நெய்யிட்டு வளர்த்து அதனால் ஆட்சியைக் கைப்பற்றிய திமுகவுக்கு அது பற்றித் தெரியாதா என்ன?
அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் உருவானது...
தொலைக் காட்சி என்பது ஆடம்பர பொருளாகவே இருந்து வந்தது அது வரை...
கேளிக்கைகளையே முதன்மை நிகழ்ச்சிகளாகக் கொண்ட தமிழகத்தில்
''இலவசத் தொலைக் காட்சி'' என்று அறிவித்துத் தேர்தலில் மொத்தக் கவனத்தையும் திமுகவின் மேல் திருப்பினார் கருணாநிதி...
தேர்தல் அறிக்கையில் மேலும் இலவசங்கள்.
"திமுகவின் தேர்தல் அறிக்கையே இத்தேர்தலின் ஹீரோ"
என்று பூரித்தார் வெட்டி வேட்டி கி.வீரமணி.
பிற்காலத்தில் ஜெயலலிதா அறிவித்த இலவசங்களை எதிர்த்த உடன் பிறப்புகள் அன்று எங்கே போனார்கள்?
ஆதி பாவம்.
இலவசத் தொலைக் காட்சி திட்டத்துக்காக தமிழன் கொடுத்த விலை ரூபாய் நாலாயிரம் கோடி வரிப்பணம்..
கருணாநிதியின் தமிழ் பற்றுக்குத் தமிழகம் கொடுத்த விலை பல நூறு கோடி ரூபாய்கள்.
தமிழ் சினிமாக்கள் ஒரு கட்டத்தில் பெரும்பாலாக ஆங்கிலப் பெயர்கள் கொண்டே வெளிவந்தன...
தமிழினக் காவலர் துடித்துப் போனார்...
தமிழில் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்தார்...
சினிமாக்களின் வசனமோ, பாடல்களோ நல்ல தமிழில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை...
''காட்பாதர்'' என்று பெயரிட்டிருந்த தன் படத்திற்கு 'வரலாறு' என்று பெயரிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்...
அரசு கஜானா சில கோடிகளை இழந்தது அப்படத்திற்குக் கொடுக்கப் பட்ட வரி விலக்கால்...
அத்திட்டத்தையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று சொல்லி இருக்கலாமே?
இதில் வேடிக்கை என்னவென்றால் முத்தமிழ் அறிஞர் பேரன்கள் நடத்திவரும் சினிமாத் தயாரிப்புக் கம்பெனிகளின் பெயர்கள்
'"ரெட் ஜெயண்ட் மூவீஸ்'', ''கிளவுட் நைன்''.
அவர் மகன் நடத்திய வீடியோ கடையின் பெயர் ''ராயல் கேபிள் விஷன்'', பர்னிச்சர் கடையின் பெயர் ''ராயல் பர்னிச்சர்''.
மேற்சொன்ன இரண்டு இலவசத் திட்டங்களின் விலை மட்டுமே நூற்றுக் கணக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் போதுமானவை...
செம்மொழி மாநாடுக் கூத்து
முத்தமிழ் காவலரின் தமிழ் தாகம் ஊரறிந்தது...
தன்னுடைய தமிழ்ப் பற்றை நிலை நாட்டிட "உலகத் தமிழ் மாநாடு "என்று அறிவித்தார்.
அப்புறம் அதில் சிக்கல் என்றவுடன் ''செம்மொழி மாநாடு'' என்றார்.
செலவு 500 கோடி ரூபாய்.. மக்கள் வரிப்பணம்..
அந்த மாநாட்டால் தமிழுக்கு ஒரு எள் முனையளவுக் கூட உபயோகமில்லை...
அந்த மாநாடு நடந்த சமயத்தில் கருணாநிதியால் மலையாளத்தான் என்று இகழப்பட்ட எம்ஜியார் நிறுவிய தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது...
பல்கலைக் கழகமே நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தது...
தமிழ் பல்கலைக் கழகத்தைச் சீரழித்த கருணாநிதியைக் கண்டிக்காதவர்கள் பின்னாளில் ஜெயலலிதாவை கண்டிக்க வக்கில்லாதவர்கள்...
ஆதிப் பாவத்தைக் கண்டிக்காமல் விழுதை வசைப் பாடுவது கேடுகெட்ட பாரபட்சம்...
விவசாயக் கடன் ரத்து..
வாரியிறைக்கப் பட்ட இலவசங்களில் இன்னொன்று ''விவசாயக் கடன் தள்ளுபடி''.
2006 தேர்தலுக்கு முன்பு
வங்கி அதிகாரிகளால் விவசாயக் கடன்களை வசூலிக்க முடியவில்லை...
கடன் வாங்கியவர்கள்
"திமுக ஆட்சிக்கு வந்தால் கடன் ரத்தாகும் ஆகவே தேர்தல் வரை நாங்கள் பணம் தருவதாய் இல்லை"
என்று கடனை திரும்பி
தர மறுத்தார்கள்.
பதிவியேற்றவுடன் மேடையிலே கையெழுத்திட்ட முதல் உத்தரவு
"விவசாயக் கடன் ரத்து".
அரசுக்கு 5000 கோடி ருபாய் இழப்பு...வரிப்பணம்..
விவசாயக் கடன் ரத்தின் சாதக-பாதகங்கள் வேறு விவாதம் ஆனால் அதற்குக் கொடுத்த விலை கணிசம்...
கல்விக் கடன் ரத்து மேளா..
அடுத்து தேர்தலுக்குக் கவர்ச்சியாக கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது.
அந்த கால கட்டத்தில் இந்தியாவில் வழங்கப்படும் கல்விக்கடன்களில் 50%
தென் மாநிலங்களில் இருந்தது .
தமிழகத்துக்கு கல்விக் கடன்களில் முதல் இடம் - 16,380 கோடி ரூபாய்.
16,380 கோடி ரூபாயில் சில ஆயிரம் கோடிகளை ரத்துச் செய்தாலும் அது பல கல்லூரிகள் கட்டுவதற்கான பணத்திற்கு ஈடானது.
இலவசம் என்றால் தான் ஓட்டு விழும்...
பாவ்லோவ் (Pavlov) தன் நாயை பழக்கியது போல் (Pavlov's Dog Theory) இலவசத்திற்கு தமிழக வாக்காளனை வாய் பிளக்க வைத்ததே திமுகவின் சாதனை...
No comments:
Post a Comment