Thursday, January 14, 2021

பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்.

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்
பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்


















மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. பின்னர் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுக்கு பிறகு, கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மண்டல பூஜை காலங்களில் குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டல பூஜை நிறைவு நாளில் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டு, தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. நேற்று மாலை பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை காண பக்தர்கள் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை நடைபெறும். 19-ந் தேதி மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருசி சிறப்பு பூஜை சன்னிதானத்தில் நடைபெற உள்ளது.

20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 6.30 மணிக்கு அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அத்துடன் 2020-2021-ம் ஆண்டு்க்கான மண்டல, மகர விளக்கு பூஜை திருவிழா நிறைவு பெறும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...