PIA என்பது பாகிஸ்தானை சேர்ந்த பயணிகள் விமான போக்குவரத்து அமைப்பு ஆகும் . பாகிஸ்தான் இன்டர் நேஷனல் ஏர்லைன்ஸ் என்பதை சுருக்கமாக PIA என்று அழைப்பார்கள் .
........
பாகிஸ்தானின் இந்த விமான போக்குவரத்து அமைப்பு சில சர்வதேச விமான கம்பெனிகளிடமிருந்து போயிங் 777 ஏர் ரக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி அந்நாட்டு பயணிகள் போக்குவரத்தை நடத்தி வருகிறது .
........
அந்த சர்வதேச கம்பெனிகளிடம் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களின் படி வாடகை தவணையை பாகிஸ்தானின் PIA விமான கம்பெனியால் தர முடியவில்லை .
.......
பாகிஸ்தான் எர்லைன்ஸ் ஃபிளைட் 895 கராச்சியிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது . ஜனவரி 15 2021 அன்று கோலாலம்பூரில் தரையிறங்கிய போயிங் 777 ER வகை விமானத்தை (சீரியல் நம்பர் 32716 ) தவணை தொகை செலுத்தாதற்காக மலேஷியாவின் கோர்ட் ஜப்தி செய்து அதாவது பறிமுதல் செய்து அதாவது PIA வின் விமானத்தை கைப்பற்றி வைத்துள்ளது .
.......
தவணை பணம் செலுத்தாவிட்டால்
விமான்ங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்று பாகிஸ்தானிய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . நிதி நெருக்கடியால் தவணை தொகை செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தானிய அரசு இருப்பதாக பாகிஸ்தானிய பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
........
தவணை செலுத்த முடியாமல் ஏரோப்பிளேன் ஜப்தி ஆன செய்தியை பாகிஸ்தானின் ஆங்கில செய்தி தாளான டானிலும் (DAWN) பாகிஸ்தான் டிவியான GEO டிவியிலும் தலைப்பு செய்திகளாக வந்துள்ளதை இணைக்கப்பட்ட புகைப்படங்களில் காணலாம் .
.........
பின்குறிப்பு 1 இந்தியாவில இருக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிதி திரட்டி இம்ரான் கானுக்கு தருவாய்ங்களா ?
.......
பின்குறிப்பு 2: மலிவு விலையில் விமான டிக்கெட் விற்று எப்படி பெற்றிகரமாக விமானக் கம்பெனியை நடத்துவது என்று பாகிஸ்தானி அரசுக்கு தமிழ் நாட்டு சினிமா டைர டக்கர்ஸ் யாராவது ஐடியா கொடுப்பாய்ங்களா ?
No comments:
Post a Comment