ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ' ஸ்ரீ ராம ஜெயம் ' கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு முறை 'ராம' என்று சொன்னால் அது ஒரு சகஸ்கர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார்.
அப்படி பட்ட ஆஞ்சநேயர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருகின்றார்.
தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீ ராமனிடத்தில் ஒப்படைத்து. தனக்காக வாழாமல் ஸ்ரீ ராமனுக்காகவே வாழுகின்றார்.
ஸ்ரீ ராம நாமத்திற்கு ஏன் இவ்வளவு பெருமை ?
சிவ விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம். நாரயனானில் இருந்து வருகின்ற 'ரா' வும் நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம' வும் சேர்ந்த நாமமே 'ராம'.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
'ராம' என்றிரண்டெழுத்தினால்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாகும் ....
ஸ்ரீ ராம ஜெயம்
No comments:
Post a Comment