காங்கிரஸ் மீண்டும் தவறு செய்கிறது.
சோனியாவோ, ராகுலோ இந்திரா எப்படி பலியிடப் பட்டார் என்று மறந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
1977 ல் காங்கிரஸை மத்தியில் முதன்முதலாய் துரத்தி விட்டு அமர்ந்த ஜனதா அரசை சங்கட படுத்த பஞ்சாபில் கிளம்பின பின்தரன்வாலே என்கிற சின்ன ரவுடியை தூண்டி விட்டு தலைவலி கொடுத்தனர். டெல்லி போராட்ட களமாகியது.
(அப்போது சிறப்பாக செயலாற்றி பெயர் எடுத்தவர் தான் கிரண் பேடி).
அன்று வெளிய விடப் பட்ட பூதத்தை பின் எளிதாக மீண்டும் பாட்டிலில் அடைத்து விடலாம் என்று நம்பி ஏமாந்தவர் தான் இந்திரா.
வெளியே வந்த பூதம் இந்திராவையே விழுங்கி பின் அதன் எதிர் வினையாக டெல்லியில் சுமார் 3500 சீக்கியர்களை பலி கொண்டு பின் வாங்கியது.
சுமார் 40 வருடம் கடந்து ராகுலும் சோனியாவும் மீண்டும் அதே தவறுகளை செய்கிறார்கள்.
பலன் படு பயங்கரமாக இருக்குமோ என்று அச்சம் எழுகிறது.
80 களில் தங்களின் நற்பெயரை இழந்த சீக்கியர்கள் மீண்டும் அதை திரும்ப பெற முடியவில்லை. அதற்குள் மீண்டும் தங்கள் முரட்டு முட்டாள் தனமான நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். பிரிவினை வாதிகளோ, அதற்கு துணை போகும் நரிகளோ மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.
They are doomed!
டெல்லியோ செங்கோட்டை யோ சீக்கியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல!! இந்தியா முழுமைக்குமானது !
பாரதம் வெல்லும். ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment