*நான் செய்த பாவங்கள்*..
நான் 71 வயது பூர்த்தி அடைந்தவன், நான் கோவை மாவட்டத்தில் சில உணவு ஹோட்டல்களை நடத்தி வந்தேன், சில நாட்களுக்கு முன் என் நண்பர் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் அவகள் மறைந்தார், அவர் செய்த தொண்டு மற்றும் நான் செய்த தவறுகளை என் மனசாட்சிப்படி விளக்குகிறேன் என் மன அமைதிக்காக.
நான் 35 வருடமாக ஹோட்டல் தொழில் செய்து நல்ல முறையில் முன்னேறி என் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன் அதாவது கடமையை சரியாக செய்தேன் என் பிள்ளைகள் வேறு நல்ல உயர் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்தார் , அங்கு நாங்கள் கொடுக்கும் உணவை விட தரமான உணவு எங்கள் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தார்
என் உணவு விடுதி அவர் கடையிலிருந்து 7 கீமி தூரத்தில் இருந்த என் கடையின் வியாபாரம் படுத்து விட்டது. எங்கள் பகுதியில் தங்கியிருப்பவர்கள் பயணம் செய்தது சென்றாலும் அந்த விலை குறைவு.
நான் அவரை நேரடியாக சந்தித்து இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டேன் அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரிய படுத்தியது. ஒன்று நான் பெரிய முதலீடு செய்தது ஆடம்பரமாக கடையை கட்டவில்லை , குறைந்த முதலீடு அதிக வியாபாரம். இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்கினேன்..
மூன்றில் ஒரு மடங்கு விலைக்கு கிடைத்து அதனால் உங்களை விட என் செலவு மூன்றில் ஒரு பங்குதான் சிறிதளவு லாபத்துடன் அதாவது மருத்துவமனை செயல்பாடு நடக்க குழந்தைகள் கேளிக்கை பாங்க் நடக்க ஆகும் செலவுகளை இங்கே லாபமாக வைத்தேன்.
அவர் என்னையும் சொன்னார் இப்ப நீங்கள் வாழ்வில் நிறைவு நிலைக்கு வந்துவிட்டீர்கள் மேலும் உங்கள் தேவைக்கு மேல் சாம்பாதித்து விட்டீர்கள் ஏன் சேவை செய்ய கூடாது என்றார். நான் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு அன்று அவர் மீது கடும் கோபம் மட்டும்தான். ஆனால் வீட்டில் வந்து என் பிள்ளைகளிடம் பேச அவர்கள் சொன்னது நம் கடையை மூடலாம் நாம் அவரைப்போல செய்தால் கடும் அரசியல் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிவரும் அவர் வீம்புக்கு செய்கிறார் , நமக்கு இப்ப நஷ்டம் ஆகிறது என்றனர்.
சில நாட்களில் எனக்கு எங்கள் ஏரியா திமுக செயலரிடம் இருந்து போன் வந்தது , அனைத்து ஹோட்டல் முதலாளிகளும் சுப்னமணியத்தை சந்தித்து பேச செல்வதாகவும் நீங்களும் அந்த குழுவில் செல்லுங்கள் என்று கட்டாயபடுத்தப்பட்டேன். 20 க்கு மேற்பட்டவர்கள் சென்றோம்
என்னுடன் வந்த சிலர் கடும் கோபத்தில் வசைபாடி கொண்டே வந்தனர் , அவரிடம் சென்றோம் இவர்கள் அனைவரும் அவரிடம் உங்கள் விலையை கண்டிப்பாக ஏற்ற வேண்டும் என்றனர், கூட வந்த திமுக பிரமுகர் அவரை மிரட்டும் பாணியில் பேசினார்.
அசராத சுப்ரமணியம் எதிர் வழியில் சென்றார் இன்னும் விலையை குறைப்பேன் என்றார் , நீங்களும் விவசாயிகளிடம் நேராக வாங்குங்கள் என்றார், இறுதியில் கடும் வாக்கு வாதம் நடந்து எந்த பலனும் இன்றி முடிந்தது.
நானும் வந்து சில மாதங்கள் பார்த்தேன் கடையை மூடிவிட்டேன், அதனால் தனிமையான நான் சிந்திக்க தொடங்கினேன் ஏன் நம் விலை அதிகம் என்று ஒன்று ஆடம்பரம் மற்றொன்று அரசியல்வாதிகள் அதிகாரிகள் மாமூல் , மற்றொன்று அரசியல்வாதிகள் சொல்லும் இடங்களில் பொருளை வாங்கி வந்தேன் மற்ற இடங்களை விட கம்மி விலைதான். ஆனாலும் நான் உற்பத்தி ஆகும் இடத்தில் சென்று வாங்கியிருந்தால் என் லாபம் பலமடங்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்தேன்
சில நேரங்களில் விவசாயிகளிடம் பேசும்போது அவர்கள் விலை நான் வாங்கும் விலையில் நான்கில் ஒரு பகுதி என்று கண்டு ஆச்சிரியப்பட்டேன்.
அப்ப இங்கே விலைவாசி உயர்விற்கு அரசியல் வாதிகள் துணையுடன் நடக்கும் இடைத்தரகு வியாபாரம் மட்டுமே காரணம் நான் நடத்திய கடைகளில் பெரும்லாபத்தை அவர்கள் அடைந்தனர் என்பதை கண்டேன் எனக்குக் 100 க்கு 20 லாபம் என்றால் அவர்களுக்கு 100 க்கு 40 லாபம் மக்களுக்கு 50 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய பொருள் 120 ரூபாய்க்கு செல்கிறது என்பதை கண்டு நொந்து விட்டேன்.
என் நெருங்கிய தொடர்பில் இருந்த திமுக பிரமுகர் என்னிடம் மாதம் மாதம் மாமூல் வாங்குவார் எந்த பிரச்சினை என்றாலும் அவர் தீர்த்து வைப்பார், பிறகு தெரிந்து கொண்டேன் அவரே பிரச்சினையை உருவாக்கி தீர்ப்பது போல் நடித்துள்ளார்.
அவர் குறிப்பிடும் ஹோல்சேல் கடை அவர்கள் கட்சி மேல்மட்ட உறுப்பினருடையது என்பதை அறியவே பெருத்த சிரமத்தை எடுத்தேன். அது முகப்பில் இஸ்லாமிய ஓனர்களால் நடத்த படுகிறது ஆனால் பின்னால் அது திமுக பிரமுகரின் சொத்து அங்கு வரும் பொருட்கள் விலை இரண்டுமடங்காக மாற்றி விற்க படுகிறது. எந்த கடையும் அவர்களைவிட குறைந்த விலைக்கு விற்ககூடாது என்பது நடைமுறை கட்டுப்பாடு முடிந்தளவு இந்த மாதிரி கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.
நான் சிந்தித்து பார்க்கும் போது என் மனசாட்சி என்னை தூங்க விடவில்லை அடுத்த வந்த சுப்ரமணியத்தின் மரணம் என்னை மிகவும் பாதித்தது , எனக்கும் என் மரணம் நினைப்பு தினமும் வந்தது அதனாலேயே இந்த கடிதம் , விரைவில் என் மரணம் வரும் ஆனால் என் மரணம் 2021 தேர்தல் வரை தள்ளிபோக வேண்டும் என்று தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன்,
இத்தனை நாளும் என் அறியாமை மற்றும் இயலாமையால் நான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என் தவறுக்கு மூலகாரணமாக இருந்த திமுகாவை எதிர்த்து வாக்களித்து மறணிக்க விரும்புகிறேன், இதுவரை நான் திமுக உறுப்பினர் இன்றும் உறுப்பினர் சாகும் வரை இருந்தாக வேண்டும் என் பிள்ளைகள் உத்தரவு , ஏனெனில் இது நான் பப்ளிக்காக அறிவிக்க முடியாது,.
நான் மரணமடைந்தால் என் மீது திமுக கொடி போடப்படும் ஆனால் இந்த தேர்தல் வரை நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக முதல் முறையாக திமுகவிற்கு எதிராக வாக்களிப்பேன். இன்று பல ஹோட்டல் மூடப்பட இன்று திமுக பினாமிகள் ஏன் கட்சி தலைமையே நிறைய ஹோட்டல் நெட்வொர்க் ஏன் பல துணி கடைகளை கையகபடுத்தி வருகின்றனர்..
நாடாளுமன்ற வெற்றிக்கு பிறகு அவர்கள் சட்டமன்ற வெற்றி உறுதி என்று எடுத்துகொண்டு வேலையை அரம்பித்து விட்டனர் அன்று மாமூல் என்று எங்களை தொழிலாவது செய்ய விட்டனர் அடுத்த தலைமுறை இன்னும் படுமோசம் கண்டிப்பாக அனைத்து தொழில் வியாபரங்களும் அவர்கள் கட்டுப்பாடுக்கு வரும் என்பதை நன்கு உணற முடிகிறது. அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டும்
சொல்லும் விலைக்கு மக்கள் வாங்க வேண்டும் வெக்கத்தை விட்டு சொல்கிறேன் என்னதான் ஆட்சி நடந்தாலும் வியாபாரிகள் என்றும் திமுக ஆட்கள்தான் நானும் கூட அப்படித்தான் அவர்களிடம் பல இஸ்லாமிய ரவுடிகள் உள்ளனர் எதிரப்பவர்களை சரிகட்டி விடுவார்கள். எதிர்கட்சியாக இருந்தால் அடக்கி வாசிப்பவர்கள் ஆளும்கட்சி என்று வந்தால் புது உத்திகளை புகுத்தி அவர்கள் கட்டுப்பாட்டை விரிவு படுத்துவர்.
என் கடைக்கு வந்த எதிர்கடையையே ஒரு காலத்தில் அவர்கள் உதவியுடன் மூடச்செய்தேன் அதெல்லாம் நான் ஆசைப்பட்டு செய்த பாவங்கள் இப்பவும் சொல்வேன் திமுக என்ற கட்சி அடியோடு அழித்தால் தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் மூன்றில் ஒரு பங்காவது குறையும். இது கசப்பான என் அனுபவம் மற்றும் உண்மை நான் இது அனுப்ப காரணம் என் பாவத்தை குறைக்கவே தயவு செய்து எனக்கு உதவ அனைத்து தமிழருக்கும் கொண்டு சேருங்கள் பல சாந்தி கியர் சுப்பிரமணிகள் உருவாகட்டும் மக்கள் செலவு குறைந்து நிம்மதி பெருகட்டும்.
இணையத்தில் நான் பார்த்தது மணதை நெகிழ வைத்ததால் இதை இங்கு சமர்பிக்கிறேன்.
No comments:
Post a Comment