அல்சரைக் குணமாக்கும் முட்டைகோஸ் ஜூஸ் !!
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸை அருந்தி வந்தால், உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முட்டைக்கோஸ் ஜூஸில் அதிக அளவில் உள்ளன. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையும்.
முட்டைக்கோஸில் க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம் இருப்பதால், இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையிலுள்ள அழற்சியை சரிசெய்து, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும்வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸை குடித்து வந்தால் கல்லீரலை சுத்தம் செய்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையை சரிசெய்யும்.
முட்டைக்கோஸ் ஜூஸை பருகி வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களை தடுக்க உதவுகிறது.
குறிப்பு :
முட்டைக்கோஸ் ஜூஸ் தயாரிப்பதற்கு முன்பு, அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பு+ச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.
முட்டைக்கோஸ் ஜூஸை, ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடிக்கக் கூடாது..!!!
No comments:
Post a Comment