கோயமுத்தூர்க்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே....
1) கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.
பொருள்: ஏஞ்சாமி ஒழுங்காப்படிக்கோணு. படிக்க வேண்டிய படிச்சுப்போட்டு அதேகணக்கா நடந்து காட்டோணு.
+++++++++++++++++
2) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்: அனிச்சம்பூ இருக்குதல்லோ... அத மோந்தாலே வாடிப்போகுங் கண்ணு. வூட்டுக்கு வொறம்பற வந்தாங்கன்னா...ஒன்ற மூஞ்சி போற போக்கை வச்சே கண்டுக்குவாங்க ( நாம வந்தது வூட்டம்மணிக்கு பிடிக்கலன்னு)
+++++++++++++++++
3) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
பொருள்: அழகு போல பழம் கனிஞ்சு இருக்குதுல்ல.. எவனாச்சும் காயத் திம்பாங்களா.. கூறுகெட்டவனே..! மனுசன்னா வாயில நாலு நல்ல பழம வரோணு..சும்மா மசமசன்னு பேசக்கூடாது ஆமா.
+++++++++++++++++
4) புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்.
பொருள்: அவனுக்குப் பொறகால ஆயிரம் பொல்லாப்பு பேசறீயே கண்ணு.. நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறியே.. திருவாத்தா..! இதெல்லாம் ஒரு பொழப்பா சாமி...இதுக்கு செத்து தொலயறதே மேலு.
+++++++++++++++++
5) சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
பொருள்: நீங்க வாயால வடை சுடாதீங்கோவ். மாப்ள..! சொன்னமாறி செய்யோணுமுங்கோவ்..
No comments:
Post a Comment