"சிலருக்குப் பிறக்கும் போதே அமைந்து விடுகிற வாழ்க்கை பலருக்கும் வாழ்நாள் முழுதும் போராடினாலும் கிடைப்பதில்லை..
முள்ளங்கி பெத்தாற் போல் முன்று வாரிசு இருந்தும் முதுமையில் முச்சந்தியில் நின்று பிச்சையெடுக்கிற வலி.... அது முள் அங்கி துளைத்தெடுக்கிற துயரம் ஆகும்...
️"16 வயதில் ஒரு சிறுவன் வேலைக்குப் போனால் அப்பா சரியில்லை! 61 வயதில் ஒரு முதியவர் வேலைக்குப் போனால் மகன் சரியில்லை!" என்பார்கள்..
️நம்மில் எத்துணை பேர் சிறந்த தந்தையும் மகனையும் பெற்றுள்ளோம் என்பதை எண்ணிப் பாருங்கள்! இப்போது பிரச்சனையாய் உங்களை வாட்டும் கவலை விட்டு விலகி விடும்...
ஆம்... அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து நல்லபடியாய் நடமாடுவதற்கே பலரும் தவம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை உணருங்கள்..
️நமது இலக்கு நோக்கிய பயணத்தில் தினம் தினம் முன்னேறிச் செல்லும் அதே நேரம், தற்போது உள்ள இடத்தை, உள்ளம் முழுமையாய் ஏற்று மகிழ வேண்டும்...
No comments:
Post a Comment